அம்பாளை உபாஸிப்பதே ஜன்மா எடுத்ததன் பெரிய பலன்!

ஆன்மிக கட்டுரைகள்
kamatchi

அம்பாளை உபாஸிப்பதே ஜன்மா எடுத்ததன் பெரிய பலன். அன்பு மயமான அம்பிகையைத் தியானிப்பதை விடப் பேரானந்தம் எதுவும் இல்லை.

அம்பாளை உபாஸிப்பதற்கு வேறு பலன் எதுவும் வேண்டாம். அதுவே அதற்குப் பலன்.
ஆனாலும், இந்த லோகத்தின் மாயையில் நாம் எல்லோரும் சிக்கிக் கொண்டிருப்பதால், ‘நான்’ என்பதை விட்டு, அவளை அவளுக்காகவே உபாஸிக்கிற ஆனந்தம் நமக்கு ஆரம்ப தசையில் புரிய மாட்டேன் என்கிறது.

“அம்மா! நான் எத்தனையோ தோஷம் உள்ளவன். என்றாலும் உன்னை நம்பி விட்டேன். நீ கடாக்ஷித்து விட்டால் எத்தனை தோஷமானாலும் தூர ஓடி விடும். நான் எப்படி இருக்க வேணுமோ அந்த மாதிரியாக இருக்கும் படியாக நீயே பண்ணம்மா”என்று அவளிடம் நம்மை ஓயாமல் ஒப்புக் கொடுத்துக் கொண்டிருந்தாலே போதும் – அதை விடப் பெரிய மதமோ, சித்தாந்தமோ, அநுஷ்டானமோ இல்லை.

எல்லாம் அவள் சித்தப்படி ஆகட்டும் என்று விட்டு விட்டு, நாம் பஞ்சு மாதிரி மனசில் எந்தக் கனமும் இல்லாமல் லேசாகி விட்டால் அதை விடப் பேரானந்தம் இல்லை..

  • மஹா பெரியவா அருளுரை….

அம்பிகையின் திருவடிகளில் சரணம் !

Leave a Reply