பிப்ரவரி 25 முதல் மார்ச்-9 வரை- காளஹஸ்தியில் சிவராத்திரி பிரம்மோற்சவம்

செய்திகள்

புகழ்பெற்ற சைவ திருத்தலமான ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் கோயிலில் மகா சிவராத்திரி விழா கோலகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி பிரம்மோற்சவம் நடைபெற உள்ளது. வரும் 25-ம் தேதி தொடங்கி மார்ச் 9-ம் தேதி வரை நடைபெறும் இந்த பிரம்மோற்சவத்தில் கோயிலின் மாட வீதிகளில் சிவன், பார்வதி, சுப்ரமணியன்,விநாயகர் ஆகியோர் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பர். இறுதி நாளன்று சிவனின் கிரிவலம் நடைபெற உள்ளது.

இந்த பிரம்மோற்சவத்திற்காக கோயில் சுத்தப்படுத்தப்பட்டு வண்ணங்கள் பூசப்பட்டுள்ளன. மேலும் ஆந்திரா, தமிழ்நாடு உள்பட வெளி மாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என்பதால் அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யபட்டுள்ளது.

 

Leave a Reply