ஷியாமளா நவராத்திரி!

ஆன்மிக கட்டுரைகள் செய்திகள் விழாக்கள் விசேஷங்கள்
0.jpg" alt="" class="wp-image-2532"/>

சியாமளா நவராத்திரி தை அமாவாசை 11/02/21 கும்பம் வழிபாடு

தை மாத வளர்பிறை பிரதமை 12 /02/2021 தொடங்கி 9 தினங்கள். இது குஹ்ய நவராத்திரி.

நவராத்திரி வகைகள்.
★வராஹி நவராத்ரி – ஆஷாட சுக்ல ப்ரதமை
★ஷரன்நவராத்ரி – ஆஷ்வின சுக்ல ப்ரதமை
★ஷ்யாமளா நவராத்ரி – மாக சுக்ல ப்ரதமை
★தேவீநவராத்ரி – சைத்ர சுக்ல ப்ரதமை.

ஸ்ரீலலிதா மகா திரிபுர சுந்தரியின் கையிலிருக்கும் கரும்பு வில்லின் அதிதேவதையே சியாமளா தேவி.

இவள் அறிவு என்னும் தத்துவத்தின் தலைவியாக விளங்குபவள். மனம் என்னும் வில்லைக் கொண்டு அறிவு என்னும் தத்துவம் கட்டுப்படுத்தப்படுகிறது. எனவே சியாமளா தேவியின் அருள் இருந்தால்தான் மனதையும் அறிவையும் எளிதில் அம்பிகை யிடம் லயிக்கச் செய்ய முடியும்.

ஸ்ரீலலிதா பரமேஸ்வரியின் மந்திரியாகவும் விளங்குவதால், சியாமளா தேவிக்கு மந்த்ரிணி என்னும் பெயருமுண்டு. எனவே சியாமளா தேவியின் ஆலோசனை பெற்றே பரமேஸ்வரி எதையும் செய்வாள்.

அம்பிகையின் வலப்புறம் வீற்றிருக்கும் பெருமை கொண்டவள் சியாமளா தேவி. மன இருளையகற்றி ஞான ஒளியைத் தருபவள் இவள்.

உலகில் நம் விவகாரங்களுக்கு முக்கியமானது பேச்சு. இதையே சப்தம், வாக்கு என்பார்கள்.

இவ்வாக்கிற்கு ஆதாரமான சக்திகளில் மாதங்கிதேவி முக்கியமானவள்

மந்திரியின் தயவினால் ராஜாவின் மகிழ்ச்சிக்குப்
பாத்திரமாவது போல் மாதங்கியை நாடியவர்கள் ராஜ ராஜேஸ்வரியின் அருளை அடைவது திண்ணம்.

ஓம் நமோ பகவதி சர்வ மங்களதாயினி
சர்வயந்த்ர ஸ்வரூபிணி சர்வமந்திர ஸ்வரூபிணி
சர்வலோக ஜனனீ சர்வாபீஷ்ட ப்ரதாயினி
மஹா த்ரிபுரசுந்தரி மஹாதேவி.

Leave a Reply