செங்கோட்டை, பிரானூர் ஆஞ்சநேயர் கோயில்களில் ஆஞ்சநேயர் ஜயந்தி!

ஆன்மிக கட்டுரைகள் செய்திகள்
– Advertisement –

hanumath jayanthi in sengottai

செங்கோட்டை மற்றும் பிரானூரில் உள்ள ஆஞ்சநேயர் கோயில்களில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா கோலாகலம்!

ஆண்டுதோறும் மார்கழி மாதம் மூலம் நட்சத்திரத்தன்று ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். இதேபோல தென்காசி மாவட்டம், செங்கோட்டை காவல்நிலையம் மேல்புறம் உள்ள அருள்மிகு ராம பக்த ஆஞ்சநேயா் திருக்கோயிலில் உள்ள ஸ்ரீ ராம பக்த ஆஞ்சநேயர் கோயிலில் ஆஞ்சநேயர் ஜெயந்தி இன்று கொண்டாடப்பட்டது.
விழாவை முன்னிட்டு ஆஞ்சநேயர் சாமிக்கு முழு உருவ வெள்ளி அங்கி அணிவித்து வெற்றிலை மாலை, துளசி மாலை, வெண்ணெய் சாத்தி சிறப்பு வழிபாடும், தீபாராதனையும் நடந்தது. இதில் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி கோவில் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இதே போல செங்கோட்டை பிரானூர் பார்டரில் உள்ள ஸ்ரீ ஜெய வீர் அபயகஸ்த சர்வசக்தி ஆஞ்சநேயர் கோயிலில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு காலையில் ஆஞ்சனேயா் ஹோமம் நடைபெற்றது.

தொடா்ந்து பஞ்ச திரவியங்கள் அபிஷேகம் நடைபெற்றது. அதனையடுத்து சந்தனக்காப்பு சாத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் தீபாராதனை நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி கோவில் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் பிரசாதமாக வழங்கப்பட்டது.

Leave a Reply