மனிதனுடைய துன்பங்களுக்குக் காரணம் மனதை கட்டுப்படுத்தாததுதான்.. அதை கட்டுப்படுத்த தெரிந்தால் துன்பங்கள் வராது. அதை வசப்படுத்துவதற்கான சாதனம் ‘தியானம்’.
யோக சாஸ்திரத்தில் எட்டு யோக அங்கங்கள் வர்ணிக்கப்பட்டிருக்கின்றன. தியானம் ஏழாவது அங்கம். அதற்குமுன் யமம் , நியமம் ஆகிய ஆறு அங்கங்களையும் அனுஷ்டிக்க வேண்டும். அதை அனுஷ்டித்தவனுக்கு தியானம் ஸுலபமாக உண்டாகும்.
பகவத் கீதையில் ஆறாவது அத்தியாயத்தில் தியானத்தைப் பற்றி கிருஷ்ண பகவான் சொல்லியிருக்கிறார்:
தியானம் செய்பவனுக்கு பிரஹ்மச்சர்ய ஸங்கல்பம் விசேஷமாக தேவை. அவனுக்கு தியானத்தினால் இணையில்லாத ஆனந்தம் கிடைக்கும்.
தியானத்தை குருவின் மேற்பார்வையுடன் செய்வது உசிதம். புத்தகங்களைப் பார்த்து அனுஷ்டிப்பதால் எதிர்பார்த்த பலன் கிடைக்காது. தியானத்தில் ஈடுபட பிரசாந்தமான இடம் தேவை. விக்ஷேபத்துக்கு இடம் கொடுக்காத சூழ்நிலையில்தான் தியானத்தை செய்ய வேண்டும்.
தியானயோகத்தால் சித்திபெற்ற மஹாத்மாக்களில் ஸ்ரீ ஆதிசங்கரர், ஸ்ரீ ஸதாசிவ பிரம்மேந்திரர், ஸ்ரீ சந்திர சேகர பாரதி மஹா ஸ்வாமிகள் மற்றும் ஸ்ரீ அபிநவ வித்யாதீர்த்த மஹா ஸ்வாமிகளை குறிப்பிடலாம்..
இது தியானத்தின் மகத்துவம். தியானத்தை குருவிடமிருந்து கற்றுக் கொண்டு ஜனங்கள் தினசரி வாழ்க்கையில் அதை அனுஷ்டித்து சிரேயஸ்ஸை அடைவார்களாக!
ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகளின் அருளுரைகள்