682386321" data-ad-slot="4501065173" data-ad-format="auto" data-full-width-responsive="true">
நத்தத்தில் சனிப்பெயர்ச்சி விழா
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் கோவில்பட்டியில் உள்ள அருள்மிகு ஶ்ரீ கைலாசநாதர் சமேத செண்பகவல்லி கோவிலில் சனிப்பெயர்ச்சி விழா நடந்தது. இதையட்டி அங்கு யாகசாலை அமைக்கப்பட்டு பூஜைகள் நடந்தது.
தொடர்ந்து சனிபகவானுக்கு பால் இளநீர் சந்தனம் ஜவ்வாது மஞ்சள் தேன் போன்ற 21 வகை அபிஷேகப் பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் பூஜைகள் நடந்தது. தொடர்ந்து மல்லிகை, ரோஜா, முல்லை, அரளி, செம்பருத்தி, செவ்வரளி, தாமரை, கனகாம்பரம், சாமந்திப்பூ, செவ்வந்திப்பூ,தாழம்பூ, வாடாமல்லி, ஜாதிமல்லி, மலர்கள் கொண்ட சிறப்பு அலங்காரம், அபிஷேகம், பூஜைகள் மற்றும் தீபாராதனை நடந்தது.
சுற்றுவட்டாரங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு விளக்கேற்றி சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் மூலவர் கைலாசநாதர் செண்பகவள்ளி அம்மனுக்கு விசேஷ பூஜைகள் நடந்தது.
இதை போலவே மாரியம்மன் கோவில் அருகில் லட்சுமி விநாயகர் கோவிலில் உள்ள நவகிரக சன்னதியில் சனிபகவானுக்கு பக்தர்கள் விளக்கேற்றி தரிசனம் செய்தனர்.
சோழவந்தான் விசாக நட்சத்திர ஆலயத்தில் சனி பெயர்ச்சி விழா!
மதுரை மாவட்டம், சோழவந்தான் அருள்மிகு பிரளய நாத சுவாமி விசாக நட்சத்திர ஆலயத்தில், சனிப்பெயர்ச்சி விழா நடைபெற்றது.
சனி பகவான், மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பிரதேசத்தை முன்னிட்டு, இத்திரு கோவில் அமைந்துள்ள சனீஸ் லிங்கம் மற்றும் சனி பகவானுக்கு சிறப்பு ஹோமங்களும் அதைத் தொடர்ந்து, சிறப்பு அபிஷேக ஆராதனை வழிபாடுகள் நடைபெற்றது.
இக்கோவிலானது, சனி, ராகு, குரு, ஆகிய கிரகங்கள் இணைந்த புனிதமான திருக்கோயில் ஆகும். திருக்கோயில் விசாக நட்சத்திரத்துக்குரிய ஆலயமாக விளங்குகிறது. மேலும், இக் கோயிலில், சனி பகவான் லிங்க வடிவில் வன்னி மரத்துக்கு அடியில் அருள்பாளித்துக் கொண்டிருக்கிறார். சனிப்பெயர்ச்சி முன்னிட்டு, இக்கோயிலில் சனி பிரீதி ஹோமங்களும், நவகிரகோமங்களும் வேத விற்பனர்களால் நடத்தப்பட்டது.
திருக்கோவில் செயல் அலுவலர் இளமதி முன்னிலையில், தொழில் அதிபர் எம்.வி. எம் . மணி ,பள்ளித் தாளாளரும், கவுன்சிலுருமான டாக்டர் மருது பாண்டியன் ஆகியோர்கள் ஏற்பாட்டில், சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் ,பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வந்து சிறப்பு ஹோமத்தில் பங்கேற்றனர்.
இதை அடுத்து, பக்தர்களுக்கு கோயில் சார்பில் அன்னதானங்கள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை, தொழில் அதிபர் எம்.வி.எம். மணி, கோயில் செயல் அலுவலர் இளமதி, கணக்கர் பூபதி மற்றும் ஆலயம் பணியாளர்கள் செய்திருந்தனர்.
முன்னதாக, இக் கோயிலில் காலபைரவர் சன்னதி அருகே அமைந்துள்ள சனீஸ்வர லிங்கத்துக்கு, சிறப்பு அபிஷேகங்களும், அர்ச்சனைகள் நடைபெற்றது.