e0af80e0aeb8e0af8de0aeb5e0aeb0-e0ae9ae0aea4e0ae95e0aeaee0af8d-e0aeaee0aeb4e0af88e0ae95e0af8d.jpg" alt="arapaliswarar - Dhinasari Tamil" class="wp-image-239389 lazyload ewww_webp_lazy_load" title="அறப்பளீஸ்வர சதகம்: மழைக்குறிப்பு! 1 - Dhinasari Tamil" decoding="async" data-sizes="auto" data-src-webp="https://www.deivatamil.com/wp-content/uploads/2022/04/e0ae85e0aeb1e0aeaae0af8de0aeaae0aeb3e0af80e0aeb8e0af8de0aeb5e0aeb0-e0ae9ae0aea4e0ae95e0aeaee0af8d-e0aeaee0aeb4e0af88e0ae95e0af8d.jpg.webp" data-srcset-webp="https://www.deivatamil.com/wp-content/uploads/2022/04/e0ae85e0aeb1e0aeaae0af8de0aeaae0aeb3e0af80e0aeb8e0af8de0aeb5e0aeb0-e0ae9ae0aea4e0ae95e0aeaee0af8d-e0aeaee0aeb4e0af88e0ae95e0af8d.jpg.webp 1024w, https://www.deivatamil.com/wp-content/uploads/2022/04/e0ae85e0aeb1e0aeaae0af8de0aeaae0aeb3e0af80e0aeb8e0af8de0aeb5e0aeb0-e0ae9ae0aea4e0ae95e0aeaee0af8d-e0aeaee0aeb4e0af88e0ae95e0af8d-2.jpg.webp 300w, https://www.deivatamil.com/wp-content/uploads/2022/04/e0ae85e0aeb1e0aeaae0af8de0aeaae0aeb3e0af80e0aeb8e0af8de0aeb5e0aeb0-e0ae9ae0aea4e0ae95e0aeaee0af8d-e0aeaee0aeb4e0af88e0ae95e0af8d-3.jpg.webp 768w, https://www.deivatamil.com/wp-content/uploads/2022/04/e0ae85e0aeb1e0aeaae0af8de0aeaae0aeb3e0af80e0aeb8e0af8de0aeb5e0aeb0-e0ae9ae0aea4e0ae95e0aeaee0af8d-e0aeaee0aeb4e0af88e0ae95e0af8d-1.jpg.webp 1200w" srcset="https://www.deivatamil.com/wp-content/uploads/2022/04/e0ae85e0aeb1e0aeaae0af8de0aeaae0aeb3e0af80e0aeb8e0af8de0aeb5e0aeb0-e0ae9ae0aea4e0ae95e0aeaee0af8d-e0aeaee0aeb4e0af88e0ae95e0af8d.jpg 1024w, https://www.deivatamil.com/wp-content/uploads/2022/04/e0ae85e0aeb1e0aeaae0af8de0aeaae0aeb3e0af80e0aeb8e0af8de0aeb5e0aeb0-e0ae9ae0aea4e0ae95e0aeaee0af8d-e0aeaee0aeb4e0af88e0ae95e0af8d-2.jpg 300w, https://www.deivatamil.com/wp-content/uploads/2022/04/e0ae85e0aeb1e0aeaae0af8de0aeaae0aeb3e0af80e0aeb8e0af8de0aeb5e0aeb0-e0ae9ae0aea4e0ae95e0aeaee0af8d-e0aeaee0aeb4e0af88e0ae95e0af8d-3.jpg 768w, https://www.deivatamil.com/wp-content/uploads/2022/04/e0ae85e0aeb1e0aeaae0af8de0aeaae0aeb3e0af80e0aeb8e0af8de0aeb5e0aeb0-e0ae9ae0aea4e0ae95e0aeaee0af8d-e0aeaee0aeb4e0af88e0ae95e0af8d-1.jpg 1200w">மழைநாள் குறிப்பு
சித்திரைத் திங்கள் பதின் மூன்றுக்கு மேல்நல்ல சீரான பரணி மழையும், தீதில்வை காசியிற் பூரணை கழிந்தபின் சேரும்நா லாநா ளினில் ஒத்துவரு மழையும், அவ் வானியில் தேய்பிறையில் ஓங்கும்ஏ காத சியினில் ஒளிர்பரிதி வீழ்பொழுதில் மந்தார மும் மழையும், உண்டா யிருந்தாடியில் பத்திவரு தேதி ஐந்தினில் ஆதி வாரமும் பகரும்ஆ வணிமூ லநாள் பரிதியும் மறைந்திடக் கனமழை பொழிந்திடப் பாரில்வெகு விளைவும் உண்டாம்; அத்தனே! பைங்குவளை மாலையணி மார்பன் ஆம் அண்ணல் எமதருமை மதவேள் அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர் அறப்பளீ சுரதே வனே!
தலைவனே!, பசிய குவளை மலர்மாலை அணிந்த மார்பனாகிய பெருமை மிக்க எம் அரிய மதவேள், அனுதினமும் தேவனே!, சித்திரைத் திங்களிற் பதின்மூன்று நாட்களுக்குமேற் புகழ்பெற்ற பரணிநாளிற் பெய்யும் மழையும், குற்றம் அற்ற வைகாசித் திங்களில் முழுமதிக்குப் பிறகு வரும் நாலாம் நாளிற் சரியாகி வரும் மழையும், அந்த ஆனித் திங்களில் தேய்பிறையிலே சிறப்புறும் ஏகாதசியில் ஒளிவிடும் ஞாயிறு மறையும்போது மந்தாரத்துடன் பெய்யும் மழையும், பெய்திருந்து, ஆடித் திங்களில் ஒழுங்காக வரும் ஐந்தாம் நாளில் ஞாயிற்றுக்கிழமையும், கூறப்படும் ஆவணித்திங்களில் மூலநாளில் ஞாயிறு மறைந்தபிறகு, பெருமழை பெய்தலும் நேர்ந்தால், உலகில் மிகுந்த விளைவு உண்டாம்.
Source: தமிழ் தினசரி | dhinasari.com
Related