நத்தம் மாரியம்மன் கோயிலில் திருக்கார்த்திகை தீப விழா!

ஆன்மிக கட்டுரைகள் செய்திகள்
– Advertisement –

682386321" data-ad-slot="4501065173" data-ad-format="auto" data-full-width-responsive="true">

natham murugan temple karthigai deepam

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருள்மிகு மாரியம்மன் கோவிலில், திருக்கார்த்திகையை முன்னிட்டு ,பெண்கள் கோவிலின் உள் வெளி பிரகாரங்களில் விளக்கு தீபங்களை ஏற்றினர் . இதையொட்டி, மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

அதேபோல், கோவில்பட்டியில் உள்ள கைலாசநாதர் சமேத செண்பகவல்லி கோவில் தனி சன்னதி கொண்ட பால தண்டாயுதபாணிக்கு பால் இளநீர் சந்தனம் ஜவ்வாது மஞ்சள் தேன் போன்ற 16 வகை அபிஷேகப் பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் பூஜைகள் தொடர்ந்து, நடைபெற்றது.
மல்லிகை, ரோஜா, முல்லை, அரளி, செம்பருத்தி, செவ்வரளி, தாமரை, கனகாம்பரம், சாமந்திப்பூ, செவ்வந்திப்பூ, தாழம்பூ, வாடாமல்லி, ஜாதிமல்லி, மலர்கள் கொண்ட சிறப்பு அலங்காரம், அபிஷேகம், பூஜைகள் மற்றும் தீபாராதனை நடந்தது. அதையடுத்து, சிறப்பு பூஜைகளும் நடந்தது.

பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல், நத்தம் மீனாட்சிபுரம் காளியம்மன் கோவில் அசோக் நகர் பகவதி அம்மன் கோவில் கர்ணம் தெரு மதுர காளியம்மன் கோவில் வெட்டுக்கார தெரு பத்திரகாளி அம்மன் கோவில்களில் சிறப்பு அலங்காரம், அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது.இதில், பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

நத்தம் அருகே திருமலைக்கேணியில் திருக்கார்த்திகை திருவிழா:

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் திருக்கார்த்திகையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

முருகப் பெருமானுக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், தயிர், விபூதி, திருமஞ்சணம் உள்ளிட்ட 16 வகை அபிஷேகங்கள், அலங்காரம். தீபாராதனைகள் நடந்தது. ராஜ அலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலையில் சுவாமி புறப்பாடாகி வெளிப் பிராகாரத்தில் வலம் வந்தார்.

இதையடுத்து கோவில் வளாகத்தில் லட்ச தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. மண்டபம் முன்பு அமைந்துள்ள ஸ்தூபியில் கார்த்திகை தீபம் ஏற்றப் பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விளக்கேற்றி தரிசனம் செய்தனர்.

Leave a Reply