திண்டுக்கல் நத்தம் கைலாசநாதர் கோவிலில் 1008 சங்காபிஷேகம்

ஆன்மிக கட்டுரைகள் செய்திகள் விழாக்கள் விசேஷங்கள்
– Advertisement –

682386321" data-ad-slot="4501065173" data-ad-format="auto" data-full-width-responsive="true">

natham temple somavaram

நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோவிலில் கார்த்திகை மாத முதல் சோம வாரத்தில் உலக நன்மை வேண்டி 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம்,நத்தம் கோவில்பட்டி அருள்மிகு
கைலாசநாதர் செண்பகவல்லி கோவிலில் , கார்த்திகை மாத திங்கட்கிழமைகளில் சங்காபிஷேகம் நடைபெறுவது வழக்கம். இவ்வாண்டின் கார்த்திகை மாத முதல் திங்கட்கிழமை சோம வாரத்தை முன்னிட்டு, உலக நன்மை வேண்டி 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது.
மூலவர் கைலாசநாதர் செண்பகவல்லி அம்மனுக்கு பால், பழம், பன்னீர், விபூதி,சந்தனம், புஷ்பம் ,இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டன. அதனைத் தொடர்ந்து, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனையும் காண்பிக்கப்பட்டது.

முன்னதாக, காலை கோவில் வளாகத்தில் 108 சங்குகளில் தாமரையில் சிவன் இருப்பது போல் அலங்கரிக்கப்பட்டது. மீண்டும் மாலை 5 மணிக்கு மேல் 1008 சங்குகள் மற்றும் மலர்களைக் கொண்டு சிவலிங்கம் அலங்கரிக்கப்பட்டது. 1008 சங்குகளுக்கு முன் உலக நன்மை வேண்டி யாகம் வளர்த்து பூஜைகள் செய்யப்பட்டது. இந்த பூஜையில் சுற்று வட்டாரத்தில் உள்ள ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மதுரை மாவட்டத்தில் உள்ள சிவ ஆலயங்களில் சங்காபிஷேகம் நடைபெற்றது. மதுரை மீனாட்சி அம்மன் கோயில், திருவாப்புடையார், பழைய சொக்கநாதர், இம்மையில் நன்மை தருவார், திருமங்கலம் மீனாட்சி சுந்தரேஸ்வரர், சோழவந்தான் விசாக நட்சத்திர ஸ்தலமாக பிரளயநாத சாமி, திருவேடகம் ஏடகநாதர், மதுரை தாசில்தார் நகர் சித்தி விநாயகர் ஆலயங்களில் கார்த்திகை சோமவாரத்தையொட்டி, சங்காபிஷேகம் நடைபெற்றது.


நத்தம் கோவில்பட்டியில் கும்பாபிஷேக விழாவில் தீர்த்த அழைப்பு

நத்தம் கோவில்பட்டி பகவதி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவை யொட்டி நடந்த தீர்த்த அழைப்பில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

நத்தம் கோவில்பட்டி யில் உள்ள பகவதி அம்மன், அய்யனார்சுவாமி, சந் தன கருப்புசாமி கோயில் கும்பாபிஷேக விழாவை யொட்டி மேளதாளம் முழங்க தீர்த்தம் அழைத்து வரப்பட்டது. முன்னதாக நத்தம் கோவில்பட்டி பொதுமக்கள் கரந்தமலை சென்று புனித நீராடி பின் கரந்தமலை கன்னிமார் தீர்த்தத்தை மேளதாளம் முழங்க யானை, ஒட்டகம், அலங்கரிக்கப்பட்ட ஜல்லிக்கட்டு காளைகளுடன் ஊர்வலமாக சந்தனகருப்பசாமி கோயிலுக்கு எடுத்து வந்து சிறப்பு பூஜைகள் நடந்தது.

தொடர்ந்து அங்கிருந்து நத்தம் மாரியம்மன், கைலாசநாதர் சமேத செண்பகவல்லி கோவில், பிடாரி அம்மன், கோயிலுக்கு ஊர்வலமாக வந்து அங்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பகவதி அம்மன் கோவில் முன் அமைக்கப் பட்ட யாகசாலைக்கு எடுத்து தரப்பட்டது. நவ.24 காலை 8:00 மணிக்கு மேல் 3 கோயில்களிலும் அடுத்தடுத்து கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை விழாகுழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்கின்றனர்.


Leave a Reply