682386321" data-ad-slot="4501065173" data-ad-format="auto" data-full-width-responsive="true">
சோழவந்தான் அருகே தென்கரை அகிலாண்டேஸ்வரி மூல நாத சாமி கோவிலில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹார விழா கோலாகலமாக நடைபெற்றது.
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டம், சோழவந்தான் அருகே, தென்கரை அகிலாண்டேஸ்வரி அம்மன் சமேத மூலநாத சுவாமி கோவில் உள்ள வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு 12-ஆம் ஆண்டு சூரசம்ஹார விழா நடந்தது.
இவ்விழாவை முன்னிட்டு, கடந்த திங்கட்கிழமை அன்று கணபதி ஹோமத்துடன் கந்த சஷ்டி விழா தொடங்கியது. அன்று பக்தர்கள் காப்பு கட்டி விரதத்தை தொடங்கினர். தினசரி சுப்ரமணிய சுவாமிக்கு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது.நேற்று மாலை 4 மணி அளவில் அன்னை பராசக்தியிடம் நாகேஸ்வரன் பட்டர் வேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து, 6 மணி அளவில் கோவில் முன்பாக சூரசம்ஹார விழா நடைபெற்றது.அங்கு கூடியிருந்த பக்தர்கள் வெற்றிவேல்முருகா,வீரவேல்முருகா என்று பக்தி கோஷமிட்டனர். மதுரை ஆதித்யா புட்ஸ் நிறுவனம் நிறுவனர் செந்தில் குமார் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கினார். இன்று காலை 11 மணியளவில் பாவாடை தரிசனம் நடைபெற உள்ளது. மாலை 4 மணிக்கு மேல் திருக்கல்யாணம் சிறப்பாக நடைபெறும்.
அனைவருக்கும் மாங்கல்ய பிரசாதம் மற்றும்(கல்யாண விருந்து) அன்னதானம் வழங்கப்படுகிறது. விழா ஏற்பாடுகளை, பிரதோசம் கமிட்டி செய்திருந்தனர். கோவில் செயல் அலுவலர் பாலமுருகன்,கோவில் பணியாளர்கள், பிரதோசம் கமிட்டியினர் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
காடுபட்டி சப்-இன்ஸ்பெக்டர் முத்தையா மற்றும் போலீஸார் பாதுகாப்பு செய்திருந்தனர். தென்கரை ஊராட்சி சார்பாக கூடுதல் சுகாதாரம் கூடுதல் தெருவிளக்கு குடிநீர் வசதி செய்து இருந்தனர்.
விசாக நட்சத்திர கோயிலில் கந்த சஷ்டி விழா
மதுரை மாவட்டம் விசா நட்சத்திர ஆலயமான சோழவந்தான் அருள்மிகு பிரளயநாத சிவன் ஆலயத்தில், கந்த சஷ்டி முன்னிட்டு முருகப்பெருமானுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.
சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீபிரளயநாத சிவாலயத்தில் சூரசம்ஹாரத்தையொட்டி அருள்மிகு ஸ்ரீ முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் அர்ச்சனைகள் நடைபெற்றது.
மதுரை மாவட்டம், சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ பிரளய நாத சிவாலயத்தில் சூரசம்காரத்தையொட்டி, அருள்மிகு ஸ்ரீ முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. ரவிச்சந்திர பட்டர், பரசுராம சிவாச்சாரியார், ஐயப்பன் ஆகியோர் பால் ,தயிர் ,நெய், வெண்ணெய் இளநீர் சந்தனம் திருநீறு தேன் பஞ்சாமிர்தம் உட்பட பல்வேறு அபிஷேகங்கள் செய்தனர். தொடர்ந்து, பக்தர்களுக்கு தீபாரதனை காட்டப்பட்டு, தேன் கலந்த திணை மாவு பிரசாதமாக வழங்கப்பட்டது. எம். வி. எம் .குழுமச் சேர்மன் மணி முத்தையா, நிர்வாகி வள்ளிமயில், சோழவந்தான் நகர அரிமா சங்கத்தலைவர் டாக்டர் எம்.மருது பாண்டியன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை, திருக்கோவில் நிர்வாக அதிகாரி இளமதி ,கணக்கர் பூபதி, உட்பட ஆலய பணியாளர்கள் செய்திருந்தனர்.