சபரிமலை 41 நாள் மண்டல பூஜை நவ.17ல் தொடக்கம்! பக்தர்களுக்கான மேலும் சில முக்கியத் தகவல்கள்…

ஆன்மிக கட்டுரைகள் செய்திகள்
– Advertisement –

682386321" data-ad-slot="4501065173" data-ad-format="auto" data-full-width-responsive="true">

sabarimala new year eve

உலக அளவில் பிரசித்தி பெற்ற கேரள மாநிலம் சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் பிரபலமான 41 நாள் மண்டல பூஜை காலம் வரும் நவம்பர் 17ஆம் தேதி முதல் துவங்குகிறது. இதற்காக சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவில் திருநிலை வரும் நவம்பர் 17 மாலை 5 மணிக்கு திறந்து வைக்கப்பட்டு, விழாக்கள் துவங்குகிறது.

இந்த ஆண்டு சபரிமலை ஐயப்பன் கோவில் மளிகைபுரம் மஞ்ச மாதா கோவில் புதிய மேல் சாந்திகள், திருவாங்கூர் தேவசம்போர்டு, புதிய தலைவர் சபரிமலை கோவிலை நிர்வாகம் செய்யும் பத்தனந்திட்டா மாவட்ட ஆட்சியர் புதியவர் என பல புதிய முகங்களுடன் சபரிமலை மண்டல பூஜை விழா காணும் துவங்குகிறது.
கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு பக்தர்களுக்கு அதிக வசதிகளுடன் சிறப்புடையதாக ஒவ்வொரு நாட்களும் இருக்க வேண்டும் என ஐயப்ப பக்தர்கள் ஒவ்வொருவரும் விரும்புகின்றனர்.

சபரிமலை மண்டலம் மற்றும் மகர விளக்கு பாதுகாப்பாகவும் இருப்பதற்காக ஏற்பாடுகள் தொடங்கப்பட்டுள்ளன!

நேற்று பக்தர்கள் செல்லும் பாதையில் லாஹ இலவங்கள், திரிவேணி, பம்பா பஸ் நிலையம் போன்ற இடங்களைச் சென்று பந்தனம்திட்டா ஆட்சியர் பார்வையிட்டார். அப்போது, பேரிடர் நிவாரணப் பிரிவு அலுவலர் டி.ஜி.கோபகுமார், பல்வேறு துறை அலுவலர் ஆகியோர் உடன் இருந்தனர்!

பாதுகாப்பாகவும் சுகமுடனும் மண்டல மகர காலம் இருக்கும் என்பதை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்யும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் மண்டல பூஜைக்கான ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது. வரும் நவ.16 மாலை நடை திறக்கப்பட்டு, நவ.17 முதல் டிச.27 மண்டல பூஜை முடிந்து அன்று இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும் அன்று ஒரு நாள் முன்பதிவு ஓபன் செய்யப்படவில்லை..

தற்போது வரை 40 நாளுக்கான முன்பதிவு மட்டுமே தொடங்கியுள்ளது. மண்டல பூஜை 41 நாள் 17.11.2023 முதல் 27.12.2023 மாத பூஜை நாட்களில் காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை ஐம்பதாயிரம் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

மண்டல பூஜை நாட்களில் காலை 4 மணி முதல் இரவு 11 மணி வரை ஐம்பதாயிரம் பேருக்கு அனுமதி வழங்கப்படுகிறது.

இந்த நிலையில் இன்று ஆன்லைன் முன்பதிவு தொடங்கியுள்ளது. சென்ற ஆண்டு ஒரு லட்சத்து 20 ஆயிரம் ஆன்லைன் முன்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது 70 ஆயிரம் ஆன்லைன் டிக்கெட் குறைவாக முன்பதிவு தொடங்கியுள்ளது. வரும் நாட்களில் இது அதிகரிக்கப்படுமா? இல்லை நேரடியாக வந்து முன்பதிவு செய்து தரிசனம் செய்து கொள்ளலாமா என்று பின்னர் தெரிய வரும் .

சில ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது போல், ஆன்லைன் முன்பதிவுக்கு மரகூட்டம் வழியாக அனுமதிக்கப்பட்டு, ஒரு வரிசையில் ஆன்லைன் முன்பதிவு இல்லாமல் வரும் பக்தர்கள், பழைய சரங்குத்தி வழியாக அனுமதிக்கப்பட்டிருந்தார்கள். அதுபோல் அனுமதிக்கப்படுமா என்றும் தெரியவில்லை..!!

திருவாங்கூர் தேவஸ்தானம் என்ன முடிவு எடுக்கும் என்று பொறுத்திருந்து பார்ப்போம் என பக்தர்களிடம் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மீதம் உள்ள டிக்கெட்கள் ஸ்பாட் புக்கிங் எனப்படும் முறையில் நிலக்கல், பந்தளம், எரிமேலி உள்ளிட்ட கேரளாவின் முக்கிய திருக்கோவில்களில் வழங்கப்படும். மண்டல காலங்களில் அதுதான் வழக்கம்.

இந்த நிலையில் தற்போது புதியதாக பத்தனம்திட்டா மாவட்ட கலெக்டராக ஷிபு ஐ.ஏ.எஸ் பொறுப்பேற்றார்.

முன்னாள் மாவட்ட ஆட்சியர் டாக்டர் திவ்யா எஸ் ஐயர் ஐஏஎஸ் மாற்றப்பட்டார். இந்த ஆண்டு மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு காலங்களில் பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செய்து கொடுக்க வேண்டும். முக்கியமான கோரிக்கை பேருந்து வசதி . புதிய ஆட்சியர் செயல்பாடு எப்படி இருக்கும் என்று பொறுத்திருந்து பார்க்கலாம்!

சபரிமலை கார்த்திகை ஒன்றாம் தேதி முதல் ஓராண்டு பூஜை செய்வதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள புதிய மேல்சாந்தி பிரம்மஸ்ரீ மகேஷ் நம்பூதிரி மளிகைபுறம் கோயில் புதிய மேல்சாந்தி முரளி நம்பூதிரி இருவரும் வரும் நவ.16 சபரிமலைக்கு இருமுடி கட்டி வருகின்றனர்.

திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவராக தேர்வு செய்யப்பட்ட திரு S. பிரசாந்த் நியமிக்கப்பட்டுள்ளார். சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் இந்த ஆண்டு மண்டல பூஜை வரும் நவம்பர் 17 முதல் துவங்க உள்ள நிலையில், புதிய மேல்சாந்திக்கள் புதிய தேவசம் போர்டு தலைவர் புதிய மாவட்ட ஆட்சியர் என புது முகங்களுடன் சபரிமலையில் முக்கியத்துவ விழாக்காலம் தூங்குகிறது.

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சபரிமலை விழா காலங்கள் சிறப்புடையதாக இருக்க வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இந்த நிலையில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் மிகவும் பிரபலமான பம்பை நதியில் தற்போது தண்ணீர் அதிக அளவில் வருகிறது. தெளிந்த நீரோடை போல் பார்க்கவே கண்கொள்ளாக் காட்சியாக உள்ளது. தற்போது கேரளா வனப்பகுதியில் பெய்து வரும் மழையால் பம்பை நதியில் வரும் தண்ணீரை பலரும் இப்போதே கார்களில் வந்து பார்த்து நீராடி பம்பா கணபதி தரிசனம் செய்து செல்கின்றனர்.

Leave a Reply