இடைக்காடர் 39வது அவதார பெருவிழா: திரளான பக்தர்கள் பங்கேற்பு

ஆன்மிக கட்டுரைகள் செய்திகள்
திருவண்ணாமலை கிரிவலப்பாதை, கோசாலை பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ இடைக்காடர் சித்தர் குடிலில் இடைக்காடரின் 39வது அவதார பெருவிழா இன்று வெகு விமர்சையுடன் நடைபெற்றது.

18 சித்தர்களில் முக்கிய சித்தராக விளங்கும் இடைக்காடர் சித்தர், திருவண்ணாமலையில் வாழ்ந்து ஐீவ சமாதி அடைந்தார் என்பது வரலாறு. ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 6ஆம் தேதி அன்று இடைக்காடரின் அவதார பெருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். அந்த வகையில் இன்று கோசாலை பகுதியில் அமைந்துள்ள 18 சித்தர் குடிலில் இன்று அதிகாலை கோபூஜையுடன் தொடங்கி, மஹா யாகம், ஸ்ரீ இடைக்காடர் சித்தருக்கு சிறப்பு அபிஷேகம், மற்றும் தீப ஆராதனைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று, இடைக்காடர் சித்தரை தரிசித்து அருள் ஆசி பெற்றனர்.

Leave a Reply