கரூர் புகழிமலை முருகன் கோயிலில் சிறப்பு பூஜை; ஒயிலாட்டம்!

ஆன்மிக கட்டுரைகள் செய்திகள்
கரூர் புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி மலைக்கோவிலில் நடைபெற்ற ஸ்ரீ ஈசன் வள்ளி கும்மி ஒயிலாட்ட நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேறறார்கள்.

கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள, புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி மலைக்கோவிலில், வேலாயுதம்பாளையம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சார்பாக, வள்ளி கும்மி ஒயிலாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.
கொங்கு ஒயிலாட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் பழனிவேலு தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், நூற்றுக்கணக்கான ஆண்கள், பெண்கள் மற்றும், சிறுவர், சிறுமியர் ஒரே வண்ணத்திலான, பாரம்பரிய உடை அணிந்து, ஒயிலாட்டம் ஆடினர்.

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற, ஸ்ரீ ஈசன் வள்ளி கும்மி நடன நிகழ்ச்சியை, ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, கண்டு ரசித்தார்கள். முன்னதாக மலைக்கோவில் முருகனுக்கு நடந்த சிறப்பு அபிஷேக பூஜையில் கலந்து கொண்ட பக்தர்கள், முருகப்பெருமானை மனமுருகி வேண்டி வழிபட்டார்கள்.

Leave a Reply