682386321" data-ad-slot="4501065173" data-ad-format="auto" data-full-width-responsive="true">
மதுரை, சோழவந்தான், வைகைக் கரையில் அமைந்துள்ள பிரளயநாத சுவாமி, சிவன் கோவிலில், புரட்டாசி மாத, வளர்பிறை பிரதோஷ விழா, மிகச் சிறப்பாக நடைபெற்ற்து.
இவ்விழாவை முன்னிட்டு, சனீஸ்வரர், லிங்கம், நந்திகேஸ்வரர், சிவனுக்கு, பால், தயிர் உட்பட, 12 திரவியப் பொருட்களால், அபிஷேகம் செய்விக்கப்பட்டது. ரவிச்சந்திர பட்டர், பரசுராம சிவாச்சாரியார் ஆகியோர் அபிஷேகம் செய்தனர்.
பின்னர் சுவாமியும் அம்மனும், ரிஷப வாகனத்தில், கோவில் பிராகாரத்தில் திருவீதி உலா வந்தனர். விழாவுக்கு வந்திருந்த பக்தர்கள் அனைவரும், சுவாமியுடன், திருக்கோவிலை வலம்வந்து, சிவாயநமஹ, சிவாயநமஹ என்று பக்தியுடன் சொல்லியபடியே வந்தார்கள்.
தொடர்ந்து, சிறப்பு அர்ச்சனை, பூஜைகள் நடைபெற்றது. பாஜக, விவசாய அணி மாநிலத் துணைத் தலைவர், எம் வி எம் குழும தலைவர் மணிமுத்தையா, நிர்வாகி வள்ளிமயில், எம் வி எம் பள்ளி தாளாளர், சோழவந்தான் நகர அரிமா சங்க தலைவர் மருதுபாண்டியன் உட்பட, ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டார்கள்.
செய்தி வீடியோ:
இதுபோல், மதுரை நகரில், மீனாட்சி சுந்தரேஸ்வரர், பழைய சொக்கநாதர், இம்மையில் நன்மை தருவார், தெப்பக்குளம் முக்தீஸ்வரர், மதுரை தாசில்தார் நகர் சித்தி விநாயகர் ஆலயம், வரசித்தி விநாயகர், மேலமடை சௌபாக்ய விநாயகர் ஆலயங்களில், பிரதோஷ சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதற்கான ஏற்பாடுகளை, ஆலய நிர்வாகிகள் செய்திருந்தார்கள்.