இது யாருக்கான வலை? நீங்களும் கொடுத்திருக்கிறீர்களா விலை!

ஆன்மிக கட்டுரைகள்

.jpg" style="display: block; margin: 1em auto">

fishermen
fishermen
fishermen

ஒரு முறை, மீன் பிடிப்பவன் ஒருவன், தன் கையில் ஒரு முகம் பார்க்கும் கண்ணாடியுடன் ஒரு குளக்கரையில் நின்று கொண்டிருப்பதை சோனு என்பவன் பார்த்தான்.

அவன் கண்ணாடியை வைத்து என்ன செய்கிறான் என்று சோனு வினவினான்.

அவனோ…. தான் கண்ணாடி கொண்டு மீன் பிடித்துக் கொண்டிருப்பதாகச் சொன்னான். மேலும் இது ஒரு புதிய வழி முறை என்றும், இது கொண்டு தான் பெரும் செல்வம் சேர்க்கப் போவதாகவும் கூறினான்.

அது எப்படி செயல்படுகிறது? ?’என்று சோனு கேட்டான்

சொல்கிறேன். ஆனால் அதற்கு நீ ஆயிரம் ரூபாய் எனக்கு கொடுக்க வேண்டும். ”என்றான்

சோனுவும் ஆர்வ மிகுதியால் ஆயிரம் ரூபாயை உடனே அவனிடம் கொடுத்தான்.

இப்போது மீன் பிடிப்பவன் சொன்னான்-

‘நான் கையிலிருக்கும் கண்ணாடியை மீன்கள் நீரில் ஓடும் பக்கம் திருப்பி வைத்து சூரிய ஒளியின் பிரதிபலிப்பான வெளிச்சம் ஓடும் மீன்களின் மீது படுமாறு செய்வேன்.

உடனே ஓடும் மீன்கள் குழப்பத்தில் நிற்கும்.அப்போது நான் அவற்றை இலகுவாகப் பிடித்து விடுவேன்.
‘சோனு அதிர்ச்சி அடைந்தான்.

சோனு கேட்டான்,’ இது பைத்தியக்காரத் தனமாக இருக்கிறது. இப்படித்தான் நீ மீன் பிடிப்பாயா?

அது சரி, இன்று இந்த முறையில் நீ இது வரை எத்தனை மீன்கள் பிடித்திருக்கிறாய்?
அதற்கு மீன் பிடிப்பவன் சொன்னான்.

இன்று நீ ஆறாவது.

இப்படித்தான் நம்மில் பலர்
பல விஷயங்களில் .. கவனம் செலுத்தி, பரந்தமானை நினைக்காமல் பற்பல மீன் பிடிப்பவர்களிடம்” நாம் ஏமாந்து கொண்டே போகின்றோம்.

இந்த உலகில் எது மீன்?, எவர் மீன் பிடித்துக் கொண்டிருப்பவர்,
எவர் மீன் பிடிக்க கற்றுக்கொள்ள விரும்புபவர் என்று நாம் சொல்ல வேண்டியதில்லை .

கடவுளை சரணடையாமல் இப்படி தான் பிறரை நம்பி சிக்கிக்கொள்கிறோம்.

இது யாருக்கான வலை? நீங்களும் கொடுத்திருக்கிறீர்களா விலை! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply