கரூர் தான்தோன்றிமலை கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

ஆன்மிக கட்டுரைகள் செய்திகள்
– Advertisement –

karur thanthondrimalai purattasi kodiyetram

கரூர், தான்தோன்றிமலை புரட்டாசி திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியான தேர்த் திருவிழா, கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள், தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

கரூர், தான்தோன்றிமலையில், தென்திருப்பதி என்று அழைக்கப்படும், அருள்மிகு வேங்கட்ரமண சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கே ஆண்டுதோறும் புரட்டாசித் திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டு புரட்டாசித் திருவிழா, கடந்த  15ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. புரட்டாசிப் பெருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில், பெருமாள், உபய நாச்சிமாருடன் எழுந்தருளினார்.

மக்கள் கோவிந்தா, கோவிந்தா, என்ற முழக்கத்துடன் திருத்தேரை வடம் பிடித்து இழுந்தனர். திருத்தேர் நான்கு மாட வீதிகளிலும் வலம் வந்து, தேர்நிலையை அடைந்தது. அங்கே வீற்றிருந்தவாறு பக்தர்களுக்கு பெருமாள் சேவை சாதித்தார்.

ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு பெருமாளை தரிசனம் செய்தார்கள். புரட்டாசி மாத தேரோட்டத்தில் கலந்து கொண்ட மக்களுக்கு, மலை வீதியைச் சுற்றியுள்ள திருமண மண்டபங்களில், அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.

பக்தர்கள் கூட்டம் அலைமோதுவதால், முக்கிய சாலைகளில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இருநூறுக்கும் அதிகமான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

வீடியோ செய்தி:

Leave a Reply