ஆடி 18: தாமிரபரணி தாய்க்கு ஆடிச் சீர் செய்ய விஎச்பி., அழைப்பு!

செய்திகள்
– Advertisement –

682386321" data-ad-slot="4501065173" data-ad-format="auto" data-full-width-responsive="true">

Thank you for reading this Dhinasari News Article.
Don’t forget to Subscribe!

ஆடிப் பெருக்கு அன்று தாமிரபரணி தாய்க்கு ஆடி சீர் செய்ய வாரீர் என்று விஸ்வ ஹிந்து பரிஷத் அழைப்பு விடுத்துள்ளது.

இது குறித்து விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் தெரிவித்த போது,

நம் பாரத தேசத்தில் நதிகளை தெய்வமாக வழிபடுவது வழக்கம். ஆடி மாதம் 18 ஆவது நாளை பதினெட்டாம் பெருக்கு அன்று பெண் தெய்வமாகிய நதிகளை கருவுற்ற பெண்ணாக பாவித்து வழிபாடு செய்து வருகின்றோம்.
அந்த வகையில், நம் தாமிரபரணி தாய்க்கு பிளாஸ்டிக் இல்லாத மங்களகரமான சீர்வரிசைப் பொருட்களை படைப்பதற்காக சிறப்பு பூஜை நடைபெறுகிறது. நாளை மறுநாள் 3-8-2023 வியாழக் கிழமை மாலை நான்கு மணிக்கு, ஜங்ஷன் சிருங்கேரி கல்யாண மண்டபத்தில் இருந்து சீர்வரிசைப் பொருட்கள் உடன் தாமிரபரணி நதிக்கரை தைப்பூச மண்டபத்தில் சிறப்பு அபிஷேகங்கள் உடன் மகாதீப ஆரத்தி நடைபெறுகிறது.

நதி தேவதைகளில் மகாநதி தாமிரபரணி என வியாசபகவான் கூறுகிறார்

tamirabarani thai

எனவே நாளை மறுநாள் மாலை நான்கு மணிக்கு ஜங்ஷன் சிருங்கேரி கல்யாண மண்டபத்திற்கு தாமிரபரணி தாய்க்கு சீர் செய்ய விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் அழைப்பு விடுக்கிறோம். தாமிரபரணியை கொண்டாடி நாமும் நாடும் வளம் பெறுவோம், தாமிரபரணி பாதுகாத்து வழிபடுவது நம் கடமை என்று தெரிவித்தனர்.

மேலும், தாமிரபரணித் தாய்க்கு ஆடிச் சீர் செய்ய விரும்புபவர்கள் தகவலுக்காக தொடர்பு கொள்ள 8870718244, 9843999541 இரண்டு செல்போன் எண்களையும் விஎச்பி அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply