சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் வேல், அஸ்திரம் வைத்து வழிபாடு!

செய்திகள்
– Advertisement –

682386321" data-ad-slot="4501065173" data-ad-format="auto" data-full-width-responsive="true">

Thank you for reading this Dhinasari News Article.
Don’t forget to Subscribe!

சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் மரத்தினாலான அஸ்திரம், வேல் ஆகியவை வைத்து வழிபடப்படுகிறது.

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே அமைந்துள்ளது சிவன்மலை அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி திருக்கோவில். இங்கே வைக்கப்பட்டுள்ள ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் அவ்வப்போது உத்தரவுப் பொருட்கள் வைத்து வழிபடப்படுவது வழக்கம்.

பக்தர்கள் கனவில் வந்து உத்தரவு ஆகும் பொருட்களைக் கொண்டுவந்து, கோவில் நிர்வாகத்திடம் கொடுப்பார்கள்…
அதை ஆண்டவர் சந்நிதியில் வைத்து உத்தரவு கேட்ட பிறகு பூஜிக்கப்பட்டு பெட்டியில் காட்சிக்கு வைக்கப்படும்.
அவ்வாறு கடந்த காலங்களில் இதுவரை வைக்கப்பட்ட பொருட்கள் யாவும் சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்தப் பெட்டியில் வைக்கப் படும் பொருள்களை வைத்து, அது தொடர்பிலான சம்பவங்களும் நடந்திருக்கின்றன. எனவே சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் வைத்து பூஜிக்கப்படும் பொருள்கள் குறித்து அன்பர்கள் அதிகம் கவனம் செலுத்துவது வழக்கமாகிவிட்டது.

அதன்படி, ஆக.01 இன்று முதல் சிவன்மலை ஆண்டவர் உத்தரவு பெட்டியில் வைக்கப்பட்டுள்ள பொருள்கள்…

  1. மரத்திலான அஸ்திரங்கள்/வேல் – 4,
  2. எலுமிச்சம்பழம் – 6,
  3. ரூபாய் 101 வைத்து பூஜை செய்யப்படுகிறது.

Leave a Reply