682386321" data-ad-slot="4501065173" data-ad-format="auto" data-full-width-responsive="true">
மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் முப்பழ விழா. பக்தர்கள் ஏராளமான சாமி தரிசனம் செய்தனர்.
Thank you for reading this Dhinasari News Article.
Don’t forget to Subscribe!
மதுரை அருகே திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில், ஆனித்திருவிழாவை முன்னிட்டு அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி உள்ளிட்ட மூலவர்களுக்கு இன்று முப்பழ பூஜை நடைபெற்றது. இதில், பக்தர்கள் ஏராளமான பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
மதுரை மாவட்டம் தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றத்தில் ஆனி மாத உற்சவ திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியான முக்கனி (முப்பழ ) மா, பழா , வாழை பழங்களுடன் பூஜை இன்று நடைபெற்றது.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கடந்த 24ஆம் தேதி ஆனி ஊஞ்சல் உற்சவ திருவிழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. விழாவினை முன்னிட்டு, தினமும் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் கோயிலில் உள்ள திருவாச்சி மண்டபத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருக்கும் ஊஞ்சலில் எழுந்தருளிட தொடர்ந்து கோயில் ஓதுவார் பொன்னூஞ்சல் பாடி சிறப்பு தீபாரனை நடைபெற்று வந்தது.
இந்நிலையில், விழாவின் முக்கிய நிகழ்ச்சியான முப்பழ பூஜை இன்று நடைபெற்றது. விழாவினை முன்னிட்டு, கோயில் மூலஸ்தானத்தில் உள்ள சுப்பிரமணிய சுவாமி, கற்பக விநாயகர், துர்க்கை அம்மன், பவளக்கனிவாய் பெருமாள், சத்யகிரீஸ்வரர் ஆகிய சுவாமிகளுக்கு மா, பலா, வாழை என முப்பழங்கள் படைக்கப்பட்டு சிறப்பு தீபாராதனையும், தொடர்ந்து மா, பலா, வாழை என முக்கனிகளை உற்சவர் சுப்ரமணிய சுவாமி தெய்வானை அம்மன் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றது.
முப்பழ சிறப்பு பூஜையில் பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை, திருக்கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பாக செய்யட்டு இருந்தது.