நான்குனேரி பெருமாள் கோயிலில் தெப்ப உற்சவம்

செய்திகள்

திரளான பக்தர்கள் பங்கேற்றனர். பின்னர் பெருமாள் அனுமன் வாகனத்தில் தாயார் மற்றும் ஆண்டாளுடன் வீதியுலா புறப்பாடு நடந்தது. பிப்.3 -ம் தேதி தெப்ப உற்சவம் நடந்தது

அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தேரில் பெருமாள் சுவாமி, தாயார் எழுந்தருளினர். பின்னர் சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து தெப்ப உற்சவம் நடந்தது. தெப்ப தேரோட்டத்தை ராமானுஜ ஜீயர் சுவாமிகள் தொடங்கி வைத்தார்.  தெப்பக் குளத்தின் மையமண்டபத்தைச் சுற்றிலும் தெப்பம் 11 முறை சுற்றிவந்தது. அதன் பின்னர் பெருமாள்சுவாமியும் தாயாரும் கோயிலின் உள்பிரகாரத்தில் எழுந்தருளினர். விழா ஏற்பாடுகளை ராமானுஜ ஜீயர்மட நிர்வாகிகள் செய்திருந்தனர்.

https://www.dinamani.com/edition/Story.aspx?artid=372347

Leave a Reply