மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே குலசேகரன்கோட்டையில் இயற்கை எழில்கொஞ்சும் சிறுமலையடி வாரத்தில், குலகேரபாண்டியமன்னரால், கட்டப்பட்ட 800 ஆண்டுகள் பழமையும் பெருமையும் வாய்ந்த மீனாட்சிசுந்தரேசுவரர் கோவில் உள்ளது. இந்த கோவில் தற்போது, 72அடிஉயர இராஜகோபுரம் விநாயகர், முருகன், பிரம்மதேவர், சூரியபகவான், சந்திரபகவான் மற்றும் மீனாட்சி சுந்தரரேசுவரர், பரிவார மூர்த்திகளுக்கும் திருக்குட நன்னீராட்டுவிழா, நடந்தது.
முதல்நாள், விக்னேஸ்வர பூஜையுடன், கணபதிஹோமம், பூர்ணாகுதியும், மாலை 6மணிக்கு கிராம சாந்தியும், இரண்டாமநாள் காலை 8மணிக்கு மகாலட்சுமி ஹோமம், சுதர்சன சாந்தி, மூர்த்தி ஹோமங்கள், வாஸ்துசாந்தி நடந்தது. மூன்றாம் நாள் யாகசாலை நிர்மானம் தீபாராதனை முதற்காலயாகசாலை பூஜைகள் பரதநாட்டிய கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
நான்காம் நாள் காலை 9மணிக்கு இரண்டாம் காலயாக பூஜைகள், மாலை 5 மணிக்கு மதுரைை ரிதம் இசைக்குழுவின் பக்தி பாடல்இசை நிகழ்ச்சியும், பரதநாட்டியம் நடந்தது. மாலை 6.05மணிக்கு மூன்றாம் காலயாகபூஜைகள், ஐந்தாம்நாள் காலை 4மணிக்கு நான்காம் காலயாக பூஜைகள் நடந்தது.
காலை 9மணிக்கு இராமேஸ்வரம், அழகர்கோவில், பாபநாசம், காசி, கோதாவரி, கங்கை, காவேரி திருவேணி சங்கமம், உள்ளிட்ட திருத்தலங்களிலிருந்து புனிதநீர் எடுத்துவரப்பட்டு, குடங்களில் புறப்பாடாகி கோவில் 10.15மணிக்கு இராஜகோபுரகலசரங்களிலும், மூலவர், பரிவாரமூர்த்திகளுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. 11மணிக்கு அன்னதானம் நடந்தது.
இதன் ஏற்பாடுகளை திருப்பணிக்குழு தலைவர் ஏடுராதாகிருஷ்ணன் தலைமையில் கோவில் திருப்பணிக்குழுவினர் செய்திருந்தனர்.