திருக்கோவிலூர் திரிவிக்ரம ஸ்வாமி கோயில் கோபுரம் பாதுகாக்கப்படுமா?

செய்திகள்

மிகப் பழமையான இக்கோயில் பல்லவ அரசர்களால் கட்டப்பட்டது. இக்கோயிலில் பெரிய கோபுரங்கள் மூன்றும், சிறிய கோபுரங்கள் நான்கும் உள்ளன. கம்பீரமாய் உயர்ந்து நிற்கும் இக்கோபுரங்களில் தற்போது மரம், செடி, கொடிகள் அதிகளவில் வளர்ந்து வருகிறது.

இவைகளை வேரிலேயே கிள்ளி எறியாவிட்டால் வரலாற்றுச் சின்னமாக விளங்கும் இக்கோபுரங்கள் யாவும் சிதிலமடைய அதிக வாய்ப்புள்ளது.

எனவே கோயில் கோபுரங்களில் வளர்ந்துவரும் மரங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் விரும்புகின்றனர்.

Leave a Reply