வழிகாட்டும் விவேக சூடாமணி!

செய்திகள்
sringeri swamigal - Dhinasari Tamil

ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகளின் அருளுரைகள் :

ஆதிசங்கர பகவத் பாதர் அத்வைத ஸித்தாந்தத்தை தெளிவாகத் தெரியப்படுத்துவதற்காக எழுதிய நூல்களில் விவேக சூடாமணி மிகச் சிறந்தது. இந்நூலில் அந்த ஸித்தாந்தத்தின் எல்லா நிலைகளையும் சுருக்கமாகவும், தெளிவாகவும் அவர் சொல்லியிருக்கிறார். முக்கியமாக வேதாந்த தத்வத்தை தெரிந்து கொள்வதற்கு வேண்டிய யோக்யதையையும் யோக்கியமான சிஷ்யன் தன் குருவினிடம் தத்வத்தை கேட்கும் முறையையும், அப்பேர்ப்பட்ட சிஷ்யனுக்கு சரியான முறையில் தத்வத்தை தெரியப்படுத்தும் நீதியையும் இந்த கிரந்தத்தில் கூறியிருக்கிறார்.

எங்கள் பரம குருவான ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகர பாரதி மஹாஸ்வாமிகள், இந்த கிரந்தத்தின் மீது அழகான உரை எழுதி இருக்கிறார். அதன் மூலமாக இந்த கிரந்தத்தை சுலபமாக புரிந்து கொள்ள முடியும். இந்த கிரந்தத்தின் பிரயோஜனத்தை ஸ்ரீ சங்கர பகவத் பாதர் அதன் கடைசி ஸ்லோகத்தில் சொல்லி இருக்கிறார்

மோக்ஷத்துக்கு வேண்டிய மார்க்கம் இந்த கிரந்தத்தில் சொல்லப்பட்டிருக்கிறது என்று அர்த்தம். அந்த மார்க்கம் முக்கியமாக என்னவென்று பகவத் பாதர் சொல்லியிருக்கிறார்

மோக்ஷத்தில் விருப்பம் இருக்கிறவன் லௌகிகமான விஷயங்களை விஷத்தைப் போல் விட்டுவிட வேண்டும். திருப்தி, தயை, பொறுமை, நேர்மை, சாந்தி, கட்டுப்பாடு ஆகிய இவைகளை அம்ருதம் பருகுவது போல் கடைபிடிக்க வேண்டும். இந்த யோக்யதையை சம்பாதித்தவன் தான் மோக்ஷ மார்க்கத்தில் ஸஞ்சரிக்க முடியும் என்பது பொருள்.

இப்பேர்பட்ட பல சிறந்த விஷயங்களை கொண்ட இந்த விவேக சூடாமணியை, எல்லோரும் படித்து சிரேயவான்களாகட்டும்.

கிராமங்களில் கோயில்கள் அவசியம் … ஏன்?!

ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு கோவில் இருக்கிறது. நம்முடைய புண்ணிய பூமியில் கோவில் இல்லாத ஒரு கிராமம் கூட கிடையாது. எப்பொழுது முதல் இந்த நடைமுறை நம்மிடம் வந்திருக்கிறது ? ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு கோவில் இருப்பது தேவையா? கோவிலே இல்லாத கிராமம் ஒன்று இருந்தால் அதற்கு என்ன நேரும்?

இந்த எல்லா கேள்விகளுக்கும் இதுதான் பதில். ஒவ்வொரு இடத்திலும் சாந்தி மற்றும் ஒற்றுமையுடன் வசிக்க வேண்டும் என்கிற இயற்கையான விருப்பம் இருக்கிறது. பகவதனுக்ரஹமின்றி சாந்தி மற்றும் சந்தோஷத்துடன் வாழ்வது ஸாத்தியமில்லை. பகவத் கிருபையை பெறுவதற்கு கோவில்கள் இருப்பது அவசியம்.

Leave a Reply