பிரயத்தனம்: ஆச்சார்யாள் அருளுரை!

செய்திகள்
e0af8d.jpg" alt="Bharathi theerthar - Dhinasari Tamil" class="wp-image-239568 lazyload ewww_webp_lazy_load" title="பிரயத்தனம்: ஆச்சார்யாள் அருளுரை! 1 - Dhinasari Tamil" data-sizes="auto" data-eio-rwidth="1024" data-eio-rheight="660" data-src-webp="https://www.deivatamil.com/wp-content/uploads/2022/02/e0aeaae0aebfe0aeb0e0aeafe0aea4e0af8de0aea4e0aea9e0aeaee0af8d-e0ae86e0ae9ae0af8de0ae9ae0aebee0aeb0e0af8de0aeafe0aebee0aeb3e0af8d.jpg.webp" data-srcset-webp="https://www.deivatamil.com/wp-content/uploads/2022/02/e0aeaae0aebfe0aeb0e0aeafe0aea4e0af8de0aea4e0aea9e0aeaee0af8d-e0ae86e0ae9ae0af8de0ae9ae0aebee0aeb0e0af8de0aeafe0aebee0aeb3e0af8d.jpg.webp 1024w, https://www.deivatamil.com/wp-content/uploads/2022/02/e0aeaae0aebfe0aeb0e0aeafe0aea4e0af8de0aea4e0aea9e0aeaee0af8d-e0ae86e0ae9ae0af8de0ae9ae0aebee0aeb0e0af8de0aeafe0aebee0aeb3e0af8d-2.jpg.webp 300w, https://www.deivatamil.com/wp-content/uploads/2022/02/e0aeaae0aebfe0aeb0e0aeafe0aea4e0af8de0aea4e0aea9e0aeaee0af8d-e0ae86e0ae9ae0af8de0ae9ae0aebee0aeb0e0af8de0aeafe0aebee0aeb3e0af8d-3.jpg.webp 768w, https://www.deivatamil.com/wp-content/uploads/2022/02/e0aeaae0aebfe0aeb0e0aeafe0aea4e0af8de0aea4e0aea9e0aeaee0af8d-e0ae86e0ae9ae0af8de0ae9ae0aebee0aeb0e0af8de0aeafe0aebee0aeb3e0af8d-1.jpg.webp 1036w" srcset="https://www.deivatamil.com/wp-content/uploads/2022/02/e0aeaae0aebfe0aeb0e0aeafe0aea4e0af8de0aea4e0aea9e0aeaee0af8d-e0ae86e0ae9ae0af8de0ae9ae0aebee0aeb0e0af8de0aeafe0aebee0aeb3e0af8d.jpg 1024w, https://www.deivatamil.com/wp-content/uploads/2022/02/e0aeaae0aebfe0aeb0e0aeafe0aea4e0af8de0aea4e0aea9e0aeaee0af8d-e0ae86e0ae9ae0af8de0ae9ae0aebee0aeb0e0af8de0aeafe0aebee0aeb3e0af8d-2.jpg 300w, https://www.deivatamil.com/wp-content/uploads/2022/02/e0aeaae0aebfe0aeb0e0aeafe0aea4e0af8de0aea4e0aea9e0aeaee0af8d-e0ae86e0ae9ae0af8de0ae9ae0aebee0aeb0e0af8de0aeafe0aebee0aeb3e0af8d-3.jpg 768w, https://www.deivatamil.com/wp-content/uploads/2022/02/e0aeaae0aebfe0aeb0e0aeafe0aea4e0af8de0aea4e0aea9e0aeaee0af8d-e0ae86e0ae9ae0af8de0ae9ae0aebee0aeb0e0af8de0aeafe0aebee0aeb3e0af8d-1.jpg 1036w">

நாம் எவ்வளவு புத்திசாலிகள் ஆனாலும் ஈச்வரனின் அனுக்ரஹம் இல்லாவிட்டால் நம்முடைய காரியம் பலிக்காது என்று சொல்கிறோம்.

நம்முடைய முன்னோர்கள் ரொம்பவும் விவேசனை செய்து ஒரு முடிவுக்கு வந்தார்கள். மனிதனுடைய வாழ்க்கை ஒரு ரதம் போல் இருக்கிறது.

ரதத்திற்கு இரண்டு பக்கங்களிலும் இரண்டு சக்கரங்கள் வேண்டும். அந்தச் சக்கரங்களில் எந்த ஒரு சக்கரம் இல்லாவிட்டாலும் ரதம் செல்லாது.

மனுஷ்யானுடைய வாழ்க்கை என்ற ரதத்திற்கு இருக்கக்கூடிய இரண்டு சக்கரங்கள் என்னவென்று கேட்டால், ஒன்று நம்முடைய பிரயத்னம், இன்னொன்று ஈச்வரனுடைய அனுக்ரஹம். இந்த இரண்டு சக்கரங்களில் நம்முடைய வாழ்க்கை என்கிற ரதம் போய்க் கொண்டிருக்கிறது.

நாம் ஒரே சக்கரத்தினால் அந்த ரதத்தை ஓட்ட வேண்டும் என்று பார்க்கிறோம். முடிவதில்லை. அதனால்தான் சிலருக்கு அதிருஷ்டத்தில் நம்பிக்கை இல்லாமல், “நான் நினைத்தால் என்ன வேண்டுமானாலும் சாதிப்பேன்” என்கிற அஹங்காரம்.

இது தவறு, சிலருக்கும், “ஈச்வர ஸங்கல்பம் இருந்தால் எல்லாம் நடக்கும், அதற்கு நான் ஏன் சிரமப்பட வேண்டும்?” என்கிற ஒரு ஜாட்யம்(ஜடத்தன்மை) இருக்கிறது. இதுவும் தவறு.

நீ பிரயத்னத்தைச் செய்தால் அதற்கு ஈச்வர அனுக்ரஹம் சககாரியாய் (உதவியாக) இருக்குமே தவிர, உன்னுடைய பிரயத்னம் இல்லாமல் ஈச்வர அனுக்ரஹம் ஒன்றுமட்டும் இருந்தால் போதும் என்று பேசாமல் உட்கார்ந்தால் அந்தக் காரியம் நடக்காது.

அதனால் நாம் எவ்வளவு புத்திசாலிகளாய் இருந்தாலும்கூட ஈச்வரனை மறக்கவே கூடாது.

ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகளின் அருளுரைகள்

Leave a Reply