திருவில்லிபுத்தூரில் ஒன்று சேர்ந்து காட்சி அளித்த தெய்வங்கள்..

செய்திகள்
IMG 20221025 WA0077 - Dhinasari Tamil

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருவில்லிபுத்தூரில் ஒன்று சேர்ந்து காட்சி அளித்த தெய்வங்கள்
ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

தீபாவளி திருநாளான திங்கள்கிழமை திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆண்டாள் ரங்க மன்னார், கருட ழ்வார் பெரிய பெருமாள் ஸ்ரீதேவி, பூமாதேவி ஆகியோர் ஒன்று சேர்ந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர்
சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது பக்தர்கள் மத்தியில் பெரும் பக்தி பரவசத்தை ஏற்படுத்தியது.

திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் வருடத்திற்கு மூன்று முறை தெய்வங்கள் அனைவரும் ஒரு சேர பக்தர்களுக்கு காட்சியளிப்பது வழக்கம் அதாவது தெலுங்கு வருடப்பிறப்பு மற்றும் கௌசிக ஏகாதேசி தினத்தன்று மற்றும் தீபாவளி பண்டிகை ஆகிய தினங்களில் தெய்வங்கள் ஒன்று சேர்ந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார்கள் சிறப்பு பூஜைகளும் நடைபெறும்

அந்த வகையில் திங்கள்கிழமை தீபாவளி பண்டிகை என்பதால் ஆண்டாள் கோவிலில் பெரிய பெருமாள் பூமாதேவி ஸ்ரீதேவி அதே போல் ஆண்டாள் ரங்க மன்னர் கருடாழ்வார் ஆகியோர் ஒன்று சேர்ந்து காட்சியளித்தனர் இதற்காக பெரிய பெருமாள் கோவிலில் இருந்து ஆண்டாள் கோவிலுக்கு நேற்று பெரிய பெருமாள் பூமாதேவி ஸ்ரீதேவி ஆகியோர் மேளதாளங்கள் முழங்க கொண்டுவரப்பட்டனர் பின்னர் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது சர்வ அலங்காரத்தில் தீபாவளி முன்னிட்டு பக்தர்களுக்கு ஒன்று சேர்ந்த தெய்வங்கள் காட்சியளித்தனர் தெய்வங்கள் ஒன்று சேர்ந்து காட்சி அளிப்பதை

காண்பதற்காகவும் தெய்வங்களை வழிபடுவதற்காகவும் ஏராளமான பக்தர்கள் தீபாவளி பண்டிகை தினமான நேற்று மாலை ஆண்டாள் கோவிலுக்கு திரண்டு வந்து சாமி தரிசனம் செய்தனர்

இதற்கான ஏற்பாடுகளை ஆண்டாள் கோவில் தக்கார் ரவிச்சந்திரன் நிர்வாக அதிகாரி முத்துராஜா மற்றும் கோவில் பணியாளர்கள் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

Leave a Reply