682386321" data-ad-slot="4501065173" data-ad-format="auto" data-full-width-responsive="true">
அறந்தாங்கி : புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயிலில் ஆத்மநாதசுவாமி கோயிலில் சோமவாரத்தை முன்னிட்டு 3 வீரபத்ரர்களுக்கு வருடத்திற்கு ஒரு முறை நடைபெறும் சந்தனகாப்பு ஆராதனை நடந்தது.
ஆவுடையார்கோயிலில் மிகப்பழமையான ஆத்மநாதசுவாமி கோயில் உள்ளது இக்கோயில் பாண்டிய மன்னரிடம் முதலமைச்சராக இருந்த மாணிக்கவாசகரால் கட்டப்பட்டது. திருவாசகம் பிறந்த கோயிலாகும்.
இக்கோயிலில் ஆண்டுதோறும் கார்த்திகை சோமவார விழா திருவாவடுதுறை 24வது குருமகா சன்னிதானம் அம்பலவாணதேசிக பரமாச்சாரிய சுவாமிகள் அருளாணைப்படி நடந்த வழிபாட்டில் குருந்த மூலத்திற்கு சங்கு அபிஷேகமும் வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே சந்தனகாப்பு சாற்றி வழிபாடு நடைபெறும்.
சிறப்பு வழிபாட்டை முன்னிட்டு யோகாம்பிகா சன்னதி எதிரில் உள்ள ஆதி சிவ வீரபத்திரர் முன் மண்டபத்தில் உள்ள அகோர வீரபத்திரர் மற்றும் ரண வீரபத்திரருக்கு சந்தனகாப்பு சாற்றி வழிபாடு நடந்தது.
ஆதி சிவ வீரபத்திரருக்கு அக்ரஹார அன்பர்கள் சார்பிலும் முன் மண்டப வீரபத்திரருக்கு மாணிக்கவாசகர் இறைப்பணி நலசங்கத்தின் சார்பிலும் சந்தனகாப்பு சாற்றி மாணிக்கவாசகர் இறைபணி நலசங்கத்தின் சார்பில் முன்மண்டபத்தில் அன்னதானமும் நடந்தது.
ஆத்மநாதசுவாமிக்கு நம்பியார்களும் மாணிக்கவாசகருக்கு சிவச்சாரியார்களும் அபிஷேக அர்ச்சனைகளை செய்தனர். ஏற்பாடுகளை கோயில் கண்காணிப்பாளர் சுப்ரமணியன் மணியம் ராமன் செய்தனர்.
பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆவுடையார்கோயில் இன்ஸ்பெக்டர் முத்துச்சாமி தலைமையில் போலீசார் பாதுகாப்புபணியில் ஈடுபட்டனர்.