பணகுடி ராமலிங்க சுவாமி கோயிலில் தைப்பூசத் திருவிழா தொடக்கம்

செய்திகள்

இதையொட்டி ராமலிங்கசுவாமி, சிவகாமி அம்பாள், நம்பிசிங்கபெருமாள் ஆகியோருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து கொடியேற்றம் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் வள்ளியூர் ஊராட்சி ஒன்றியத் தலைவர் ஞானதிரவியம், பணகுடி பேரூராட்சித் தலைவர் டயானாசந்திரன், துணைத் தலைவர் சங்கர், கோயில் கணக்குப்பிள்ளை உலகநாதன் பங்கேற்றனர்.

தொடர்ந்து திருவிழா 10 நாள்கள் நடைபெறும். ஒவ்வொரு நாள் திருவிழாவும் பல்வேறு சமுதாயத்தினர் சார்பில் கொண்டாடப்படுகிறது.
இம் மாதம் 19-ம் தேதி (9-ம் திருவிழா) காலை 10 மணிக்கு ராமலிங்க சுவாமி, சிவகாமி அம்பாள் திருத்தேரில் எழுந்தருளி, தேரோட்டம், 20-ம் தேதி தெப்பத் திருவிழா நடைபெறும்.  ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை நிர்வாகிகள், பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

Leave a Reply