அருணாசலேஸ்வரர் கோவிலில் ரூ. 1.33 உண்டியல் காணிக்கை வசூல்!

செய்திகள்
thiruvannamalai temple collection - Dhinasari Tamil

அருணாசலேஸ்வரர் கோவிலில் ரூ1 கோடியே 33 லட்சம் உண்டியல் காணிக்கை வசூல்

திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

மேலும் கோவிலின் பின்புறம் உள்ள மலையை சுற்றி பக்தர்கள் கிரிவலம் சென்று கிரிவலப்பாதையில் உள்ள அஷ்டலிங்க கோவில்களிலும் வழிபாடு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று அருணாசலேஸ்வரர் கோவில் மற்றும் கிரிவலப்பாதையில் உள்ள அஷ்டலிங்க கோவில்களில் உள்ள உண்டியல்கள் அருணாசலேஸ்வரர் கோவிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்திற்கு கொண்டு வரப்பட்டு கோவில் இணை ஆணையர் அசோக்குமார் முன்னிலையில் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது.

இதில் ரூ.1 கோடியே 33 லட்சத்து 17 ஆயிரத்து 31-ம், 290 கிராம் தங்கமும், 919 கிராம் வெள்ளியும் உண்டியல் காணிக்கையாக பெறப்பட்டது.

  • செய்தி : திருவண்ணாமலை பாலா

Leave a Reply