682386321" data-ad-slot="4501065173" data-ad-format="auto" data-full-width-responsive="true">
மதுரை மாவட்ட கோயில்களில், சோமவார பிரதோஷ விழா நடைபெற்றது. மதுரை மீனாட்சி சுந்தரேசர் கோவில், மதுரை இம்மையில் நன்மை தருவார், தெப்பக்குளம் முத்தீஸ்வரர் , சிம்மக்கல் பழைய சொக்கநாதர், திருமங்கலம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில், துவரிமான் மீனாட்சி சுந்தரர் கோவில், சோழவந்தான் அருகே ஏடகநாத சுவாமி திருக்கோவில், தென்கரி மூலநாதர் சுவாமி ஆகிய கோவில்களில் ,சோமார பிரதோஷ விழா நடைபெற்றது .
விழாவை முன்னிட்டு, இக்கோவில் அமைந்துள்ள மற்றும் சுவாமி, அம்பாளுக்கு பக்தர்களால் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டது . இதை அடுத்து சுவாமி அம்பாள் ரிஷப வாகனத்தில் அலங்காரமாகி கோவில் பிரகாரத்தில் வளர்ந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்
இதில் ஏராளமான பக்தர் கலந்து கொண்டு சிவன் அம்பாளை வழிபட்டனர். இதை அடுத்து கோயில் நிர்வாகத்தின் சார்பில் பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன சோழவந்தான் சிவன் ஆலயத்தில் நந்திகேஸ்வரர் நரசிம்மர் சனீஸ் லிங்கம் சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டன
இதற்கான ஏற்பாடுகளை, தொழில் அதிபர் எம் .வி. எம். மணி, கவுன்சிலர்கள் டாக்டர் மருதுபாண்டியன், வள்ளிமயில் , கோவில் நிர்வாக அதிகாரி இளமதி கணக்கர் சி பூபதி மற்றும் ஆலய பணியாளர்கள் செய்திருந்தனர்.
மதுரை பகுதியில் மஹாளய அமாவாசை!
மதுரை மாவட்டத்தில் இம் மாதம் 2-ம் தேதி புதன்கிழமை காலை மஹாளய அமாவாசையை, ஒட்டி, ஆலயங்களில் தர்பணம் பிதுர்களுக்கு முன்னோர்களுக்கு செய்து வைக்கப்படுகிறது.
பொதுவாக, தை அமாவாசை, ஆடி அமாவாசை, மஹாளய அமாவாசை நாள்களில், பெரிய அளவில் வைகை நதிக்கரை ஓரம்,ஆலயங்களில் தர்பணம் முன்னோர்களுக்காக, வேதியர்களால், செய்து வைக்கப்படும்.
பெண்கள்,பலர் வேதியர்களுக்கு காய்கறிகள், வஸ்திரங்கள் தானம் செய்வர்.
மதுரை நகரில் பல கோயில்களில் தர்பணம் காலை நடைபெறும். கீழ்க்காணும் ஆலயங்களில் தர்பணம் செய்துவைக்கப்படுகிறது.
2.10.24.. புதன்கிழமை மஹாளய அமாவாசை தர்பணம் செய்து வைக்கப்படும் ஆலயங்கள்.
மதுரை அண்ணாநகர், யாணைக்குழாய் முத்துமாரியம்மன் ஆலயத்தில், காலை 6.10..7..மணி வரை.
மதுரை அண்ணாநகர் வைகை காலனி, வைகை விநாயகர் ஆலயத்தில், காலை 7.15..8.10..மணி வரை.
மதுரை அண்ணாநகர், தாசில்தார் நகர் சௌபாக்ய விநாயகர் ஆலயத்தில், காலை 8.30..மணி முதல் 9.20..மணி வரை தர்பணம் செய்து வைக்கப்படும்.
தர்பணத்துக்கு வரும் பக்தர்கள், கறுப்பு எள் பாக்கெட்..1, வாழைப்பழம்..2.,
பூக்கள், விளக்கு,
தர்பணம் செய்ய தட்டு, டம்ளர் கொண்டு வரவேண்டும்.