விவேகானந்தா கேந்திரா பொன்விழா ஆண்டு: செங்கோட்டையில் திருவிளக்கு வழிபாடு!

செய்திகள்
sengottai vilakku poojai2 - Dhinasari Tamil

செங்கோட்டை: செங்கோட்டை அறம்வளா்த்தநாயகி உடனுறை குலசேகரநாதசுவாமி கோவிலில் வைத்து விவேகானந்தா கேந்திர 50வது பொன்விழா ஆண்டை முன்னிட்டு உலக நன்மை வேண்டி மாபெரும் திருவிளக்கு வழிபாடு மற்றும் மாதர் மாநாடு  நடந்தது.

விழாவிற்கு விவேகானந்தா கேந்திர பத்திரிக்கை ஆசிரியா் கிருஷ்ணமூர்த்தி தலைமைதாங்கினார். கோவில் நிர்வாகி முருகையா, நகர்மன்ற துணைத்தலைவா் நவநீதகிருஷ்ணன், சமூக ஆர்வலா் மாடசாமி, நகர்மன்ற உறுப்பினா் பொன்னுலிங்கம்(எ)சுதன் ஆகியோர் முன்னிலைவகித்தனா். மாவட்ட பொறுப்பாளா் கருப்பசாமி அனைவரையும் வரவேற்று பேசினார். கேந்திர சகோதரி தெய்வானை இறைவணக்கம் பாடினார்.

sengottai vilakku poojai1 - Dhinasari Tamil

கேந்திர சகோதரிகள் சரஸ்வதி, சந்திரா பஜனை நாமாவழி பாடினா். பராசக்தி மகளிர் கல்லுாரி மாணவி சிவரஞ்சனி சமய சொற்பொழிவு  பள்ளி மாணவியா்கள் புவனேஸ்வரி, ரஞ்சனி பங்குகொண்ட நாட்டிய கலைநிகழ்ச்சி மற்றும் விழிப்புணா்வு நாடகம் நடந்தது. அதனைதொடா்ந்து திருக்குற்றாலம் சுவாமி விவேகானந்தா ஆசிரம பொறுப்பாளா் சுவாமிஅகிலானந்தமகராஜ், கிராம முன்னேற்ற திட்ட செயலாளா் ஐயப்பன் ஆகியோர் சிறப்புரையாற்றினா்.

பின்னா் முதல் திருவிளக்கு வழிபாட்டை ரமீலாபடேல், மங்களம்பாபுபடேல், மணிபென்மாதவிஜிபடேல், பெரியபிள்ளைவலசை பஞ்சாயத்து தலைவா் மனைவி மல்லிகாவேல்சாமி, 3வது வார்டு நகர்மன்ற உறுப்பினா் சுடர்ஒளிராமதாஸ் ஆகியோர் துவக்கி வைத்தனா்.

sengottai vilakku poojai3 - Dhinasari Tamil

நிகழ்ச்சியில் சமூக ஆர்வலா்கள் மணிமகேஸ்வரன், நடராஜன், முன்னாள் நகர்மன்ற துணைத்தலைவா் ஆதிமூலம். விவேகானந்தா கேந்திர மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளா் கோமதிநாயகம் உள்பட பலா் கலந்து கொண்டனா். முடிவில் கேந்திர தொண்டா் கண்ணன் நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை விவேகானந்தா கேந்திர தொண்டா்கள், கேந்திர சகோதரிகள் மற்றும் சமூக ஆர்வலா்கள் சிறப்பாக செய்திருந்தனா்.  

Leave a Reply