சீற்றத்தின் கொடுமை
கோபமே பாவங்களுக் கெல்லாம் தாய்தந்தை!
கோபமே குடிகெ டுக்கும்!
கோபமே ஒன்றையும் கூடிவர வொட்டாது!
கோபமே துயர்கொ டுக்கும்!
கோபமே பொல்லாது! கோபமே சீர்கேடு!
கோபமே உறவ றுக்கும்!
கோபமே பழிசெயும்! கோபமே பகையாளி!
கோபமே கருணை போக்கும்!
கோபமே ஈனமாம் கோபமே எவரையும்
கூடாமல் ஒருவ னாக்கும்!
கோபமே மறலிமுன் கொண்டுபோய்த் தீயநர
கக்குழி யினில்தள் ளுமால்!
ஆபத்தெ லாந்தவிர்த் தென்னையாட் கொண்டருளும்
அண்ணலே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!
இடையூறுகளை யெல்லாம் நீக்கி என்னை
ஏற்றுக்கொண்டருளும் பெரியோனே!, அருமை தேவனே!, சினமே எல்லாப் பாவங்களுக்கும் அன்னையும் அப்பனும் ஆகும், சினமே குடியைக்
கெடுக்கும், சினமே எதனையும்
அடைய விடாது, சினமே துயரந்தரும், சினமே கெட்டது, சினமே புகழைக்
கெடுப்பது, சினமே உறவைத் தவிர்க்கும்,
சினமே பழியை யுண்டாக்கும், சினமே மாற்றான், சினமே அருளைக்
கெடுக்கும், சினமே இழிவாகும், சினமே ஒருவரையும் சேர்க்காமல்
தனியனாக்கும், சினமே காலன்முன் இழுத்துச்சென்று கொடிய நரகக் குழியிலே
வீழ்த்தும்.
சினத்தைத் தவிர்த்தல் வேண்டும்.
Source: தமிழ் தினசரி | dhinasari.com
Related