சிறப்புகள் பெற்ற இத் தலத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு மார்கழி மாத சஷ்டி திதியில் தெப்ப உற்சவம் நடைபெற்றது. கடந்த 1956 ஆம் ஆண்டுக்கு பின், தலம் சிதிலமடைந்ததாலும், தெப்பக் குளம் தூர்ந்து போனதாலும் தெப்ப உத்சவம் நடைபெறவில்லை.
இந்நிலையில், கடந்த 2008ல் இக் கோயிலின் குடமுழுக்கு நடைபெற்றது. பின்னர், இக் கோயிலில் நின்று போன விழாக்கள் ஒவ்வொன்றாக ஆரம்பிக்கப்பட்டன. இதையடுத்து, தெப்பக் குளமும் தூர்வாரப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை காலை வெள்ளை விநாயகருக்கு 1008 சங்காபிஷேகமும், தொடர்ந்து ஜடா தீர்த்தத்தில் தீர்த்தவாரியும் நடைபெற்றன.
மாலையில் உத்சவ விநாயகரான சுவேத விநாயகர் வாணி, கமலாம்பிகாவோடு தெப்பத்தில் எழுந்தருளி, தெப்ப உத்சவம் கண்டருளினார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
59634" target="_blank">https://www.dinamani.com/edition/Story.aspx?artid=359634