ஸ்ரீ த்ரிநேத்ர ஆஞ்சநேயர் ஆலயத்தில் ஸ்ரீ ஹனுமந் ஜெயந்தி

செய்திகள்

ஞாயிற்றுக்கிழமை காலை 5 மணிக்கு உற்சவ மூர்த்திக்கு திருமஞ்சனம், அலங்காரம் மற்றும் ஆராதனையும் காலை 9 மணிக்கு ஸ்ரீ தர்மசாஸ்தா ஸ்ரீ ஐயப்பனுக்கு சகஸ்ரநாம பூஜையும், ஸ்ரீ சர்வமங்களா சாஸ்தா சமாஜ பஜனை மண்டலி குழுவினரின் பஜனை நிகழச்சியும், பகல் 1 மணிக்கு மேல் ஜோதிதரிசனம் மற்றும் அன்னதானம் நடைபெற்றது.

ஸ்ரீ சத்குரு ஸ்ரீமாதா அன்னபூரணி, ஸ்ரீ அன்னை ஞானேஸ்வரி, குருசாமி கண்ணன் உள்ளிட்டோரின் அருளாசி நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதனையொட்டி  மாலை 5 மணிக்குமேல் மங்கையர்கரசி மாதர் வழிப்பாட்டு மகளிரின் ஸ்ரீராநாமபஜனை நடைபெற்றது. ஆலய நிர்வாகிகளுடன் ஸ்ரீ ஜெயமாருதிதாசர் உள்ளிட்டோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்தனர்.

 

Leave a Reply