
மதுரை அழகர்கோயில், அருள்மிகு கள்ளழகர் திருக்கோயிலில், 2002ஆம் வருடத்திய கஜேந்திர மோட்சம் தெப்பத் திருவிழா பிப்ரவரி 14ஆம் தேதி முதல் பிப்ரவரி 16ஆம் தேதி முடிய மூன்று நாட்கள் நடைபெற உள்ளது.
இதில் பிப்ரவரி 15-ஆம் தேதியன்று அழகர்கோவிலில் மாலை 4:31க்கு மேல் 5.15க்குள் கஜேந்திர மோட்சம் திருவிழாவும், பிப்ரவரி 16ஆம் தேதியன்று காலை 6.45க்கு மேல் 7.30க்குள் ஆஸ்தானத்தை விட்டு புறப்பட்டு அருள்மிகு பெருமாள் பொய்கைகரைபட்டி தெப்பத்தில் பகல் 11 15க்கு மேல் 12 மணிக்குள் எழுந்தருள்கிறார்.
அன்று பகல் முழுவதும் தெப்பத்தில் இருந்து அன்று மாலை பூஜைகள் முடித்து மீண்டும் தெப்பத்துக்கு எழுந்தருளி இரவு மீண்டும் ஆஸ்தானத்துக்கு திரும்புகிறார். இதனை அழகர்கோவில் கள்ளழகர் திருக்கோயில் அதிகாரி தெரிவித்துள்ளார்.