ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகளின் அருளுரைகள்
சாஸ்திரத்தில் ஓரிடத்தில் புண்ணிய பாபங்களைச் சுருக்கமாகச் சொல்லியிருக்கிறார்கள்.
நாம் செய்யக்கூடிய தவறான காரியங்களை மூன்று விதமாகப் பிரித்திருக்கிறார்கள்,
- நாம் நம் மனதாலே சில தவறுகளைச் செய்து கொண்டிருக்கிறோம். 2. நாம் நம் வாக்கினாலே சில தவறுகளைச் செய்து கொண்டிருக்கிறோம். 3. இந்தச் சரீரத்தாலே சில தவறுகளைச் செய்து கொண்டிருக்கிறோம். இந்த மூன்று விதமான பாபங்களை நாம் செய்யவில்லை என்றால் நமக்குத் துக்கத்தை அனுபவிக்க வேண்டிய நிலையே வராது.
சாஸ்திரத்தில், அந்த மூன்று விதமான பாவங்களை;
பரத்ரவ்யேஷ்வபி த்யானம் மனஸாsநிஷ்டசிந்தனம் I
வித்தாsபினிவேசச்ச த்ரிவிதம் மானஸம் ஸ்ம்ருதம் II
என்று வகைப்படுத்தியுள்ளனர்.