மனித சரீரம்: ஆச்சார்யாள் அருளுரை!

செய்திகள்

நாம் இந்த உலகத்தில் நிலையானவர்கள் என்றெல்லாம் நினைத்துக்கொண்டு இறைவனைப் பற்றிய சிந்தனையே இல்லாமல் இருக்கிறோம்.

ஆனாலும் நம் எல்லோருக்கும் பரமாத்மாவைப் பற்றி சிந்தனை செய்ய வேண்டும் என்ற ஆசை உண்டு. பரமாத்மாவின் சாக்ஷாத்காரம் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆசை உண்டு.

ஆனால் உண்மையாக, உலகத்திலுள்ள மக்கள் நிலை இவ்வாறு இருப்பதால் ஆன்மிக வழியில் யாரும் போவதில்லை. ஆகவே இந்த உடல் என்பது என்றும் நிலையில்லை.

உலகம் என்பதும் நிலையில்லை. இந்த மனிதச் சரீரம் நமக்குக் கிடைத்திடும் வேளையில் நாம் இதைச் சரிவர பயன்படுத்தி நற்கதியைச் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்துவிட்டால் அப்பொழுது மனது என்பது வேறு எந்த விஷயத்திலும் அலையாது.

ஸ்ரீமத் அபிநவ வித்யாதீர்த்த மஹாஸ்வாமிகளின் அருள்மொழிகள்

மனித சரீரம்: ஆச்சார்யாள் அருளுரை! News First Appeared in Dhinasari

Leave a Reply