682386321" data-ad-slot="4501065173" data-ad-format="auto" data-full-width-responsive="true">
மதுரை அருகே, சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு காப்பு கட்டினர்.
மதுரை மாவட்டம் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு ஒவ்வொரு வருடமும் வைகாசி மாதம் அமாவாசைக்குப் பின்னர் வரும் திங்கட்கிழமை திருவிழா கொடியேற்றம் நடந்து. 17 நாட்கள் திருவிழா நடைபெறும்.
இதையொட்டி தினசரி ஒவ்வொரு மண்டகப் படியுடன் திருவிழா விமர்சையாக நடைபெறும். இதேபோல் இந்த ஆண்டு நேற்று இரவு அர்ச்சகர் சண்முகவேல் திருவிழா கொடியேற்ற பொருட்களுடன் மேளதாளத்துடன் நான்கு ரத வீதிகளில் வலம் வந்து கோவில் வளாகத்தில் உள்ள கொடிக்கம்பத்தில் திருவிழா கொடியேற்றும் விழா நடந்து.சிறப்பு பூஜை நடைபெற்றது.
திருவிழா கொடியேற்ற உபயதார் சிங்கம் என்ற மந்தையன் சேர்வை மகன் அழகப்பன் மற்றும்குடும்பத்தார் அனைவருக்கும் பிரசாதம் வழங்கினார்கள்.
கொடியேற்ற விழாவில் பேரூராட்சி தலைவர் ஜெயராமன் மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் வக்கீல்சத்திய பிரகாஷ் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கோவில் செயல்அலுவலர் இளமதி, கோவில் பணியாளர்கள் பூபதி,கவிதா,வசந்த், பெருமாள் ஆகியோர் திருவிழா ஏற்பாடுகளை செய்திருந்தனர். சோழவந்தான் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்லப்பாண்டி தலைமையில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருந்தனர்.
சுகாதாரப்பணி,குடிநீர்வசதி, கூடுதல் தெருவிளக்கு ஏற்பாடுகள் சோழவந்தான் பேரூராட்சி சார்பில் செய்திருந்தனர்.
கொடியேற்றத்தை தொடர்ந்து பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று பால்குடம், அக்னிச்சட்டி,பூக்குழி இறங்குதல் மற்றும் நேர்த்திக்கடன் செலுத்துபவர்கள் காப்பு கட்டினார்கள்.