நாடெங்கிலும் சிவாலயங்களில் சிவராத்திரி கொண்டாட்டம்!

செய்திகள் விழாக்கள் விசேஷங்கள்
1938"/>

இன்று மகா சிவராத்திரி விழா கொண்டாடப்படுவதால் நாடு முழுவதிலும் உள்ள சிவாலயங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து, வழிபாடு நடத்தி வருகின்றனர்.

மகா சிவராத்திரியை முன்னிட்டு நாடு முழுவதிலும் உள்ள சிவாலயங்களில் சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சிவன் கோயில்களில் குவிந்து, வழிபாடு நடத்தி வருகின்றனர்.

சிவன் கோயில்களில் நடக்கும் 6 கால பூஜைகளில் கலந்து கொண்டு, ‘ஓம் நமச்சிவாய’ என்ற மந்திரத்தை உச்சரித்து, இரவில் கண் விழித்தால் மோட்சம் கிடைக்கும் என்பது ஐதீகம். திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் ஆலயம், சிதம்பரம் நடராஜர் கோயில், தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம் உள்ளிட்ட புகழ்பெற்ற சிவாயலங்களில் சிவராத்திரி மற்றும் பிரதோஷத்தை முன்னிட்டு அதிக அளவில் பக்தர்கள் குவிந்துள்ளனர்.

உ.பி., மாநிலம் வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் ஆலயத்தில் அதிக அளவில் சாதுக்களும், பக்தர்களும் குவிந்துள்ளனர். ம.பி., – உஜ்ஜைனில் உள்ள மகா காலேஸ்வரர் ஆலயம், பஞ்சாப் – அமிர்தசரசில் உள்ள சிவாலய பாக் பையான் ஆலயம், டில்லி சாந்தினி சவுக் பகுதியில் உள்ள கெளரிசங்கர் ஆலயம், மகாராஷ்டிரா – மும்பையில் உள்ள பாபுல்நாத் ஆலயம் ஆகியவற்றில் மகாசிவராத்திரி விழா வெகு விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது.

கர்நாடகாவில் பலபுரகி பகுதியில் பிரம்மகுமாரிகள் அமைப்பின் சார்பில் 25 அடி உயரத்தில் 300 கிலோ பயறு வகைகளால் செய்யப்பட்ட சிவலிங்கத்தை ஏராளமானோர் வழிபட்டு செல்கின்றனர். ஒடிசாவின் புவனேஸ்வரில் உள்ள லிங்கராஜ் ஆலயம் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply