அயோத்தி: தொடக்கவிழாவிற்கு அனைத்து முதல்வருக்கும் அழைப்பு! நிருத்ய கோபால் தாஸ்

செய்திகள்
2072"/>

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் தொடக்க விழாவுக்கு அனைத்து மாநில முதல்வர்களையும் அழைக்க திட்டமிட்டுள்ளதாக ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளையை தலைவர் நிருத்ய கோபால் தாஸ் தெரிவித்தார்.

அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக புதிய அறக்கட்டளையை 3 மாதங்களுக்குள் தொடங்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டது. அந்த உத்தரவின் அடிப்படையில் ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளையை உருவாக்க மத்திய அமைச்சரவை அனுமதி வழங்கியது.

இந்த அறக்கட்டளைக்கு ஒரு தலித் உறுப்பினர் உள்பட 15 அறங்காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் மூத்த வழக்கறிஞரும், முன்னாள் சொலிசிட்டருமான கே.பராசரன், ஜகத்குரு சங்கராச்சார்யா, ஜோதிஸ்பீதாதீஸ்வர் சுவாமி வாசுதேவானந்த் சரஸ்வதிஜி மகராஜ் (அலகாபாத்), ஜகத்குரு மாதவாச்சார்யா சுவாமி விஸ்வா பிரசன்னதீர்த் ஜி மகராஜ் , உடுப்பி பெஜாவர் மடம், ஹரித்வாரின் யுகபுருஷ் பரமானாந்த் ஜி மகராஜ், புனேவைச் சேர்ந்த சுவாமி கோவிந்த கிரி ஜி மகராஜ் , அயோத்தியைச் சேர்ந்த விமலேந்திர மோகன் பிரதாப் மிஸ்ரா, ஹோமியோபதி மருத்துவர் அனில் மிஸ்ரா, பாட்னாவைச் சேர்ந்த கமாஸ்ஸவர் சவுபால், நிரமோகி அஹாராவின் மகந்த் தினேந்திர தாஸ், அயோத்தி பைதக் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

ராமர் கோயில் கட்டும் குழுவின் தலைவராக பிரதமர் மோடியின் முன்னாள் உதவியாளர் நிர்பேந்திர மிஸ்ரா பெயர் நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிதாக அமைக்கப்பட்ட அறக்கட்டளை அயோத்தியில் பக்தர்களைச் சந்தித்து ராமர் கோயில் கட்டுமானம் தொடர்பாகப் பேசத் தொடங்கியுள்ளது.

ஸ்ரீ ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை தலைவர் நிருத்ய கோபால் தாஸ் மற்றும் 3 உறுப்பினர்கள் வியாழக்கிழமையன்று பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து பிரதமரை பூமி பூஜை மற்றும் கட்டுமானப் பணி தொடக்க விழாவுக்கு வர வேண்டும் என்று அழைப்பு விடுத்தனர். அயோத்தியில் உள்ள ஹனுமன் மண்டலில் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது.

அதன்பின் 2-வது ஆலோசனைக் கூட்டம் மார்ச் 3 அல்லது 4-ம் தேதி அயோத்தியில் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான தொடக்கவிழா குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது.

இதுபற்றி ஸ்ரீ ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை தலைவர் நிருத்ய கோபால் தாஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அயோத்தியில் ராமர்கோயில் அமைக்கும் பணி வெகுச்சிறப்பாக தொடங்கும். இதற்கான முன்னேற்பாடுகளை தொடங்கியுள்ளோம்.

தொடக்க விழாவுக்கு அனைத்து மாநில முதல்வர்களையும் அழைக்கவுள்ளோம். அனைத்து தரப்பு மக்களையும் அனைத்து ராமர்கோயில் கட்டுமான பணியை தொடங்க திட்டமிட்டுள்ளோம். அறக்கட்டளையின் அடுத்த கூட்டத்தில் இதுபற்றிய விரிவாக ஆலோசனை நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply