வார்த்தைக்கு கட்டுப்பட்ட வாக்தேவி: ஆச்சார்யாள் அருளுரை!

செய்திகள்
sringeri Saradha
sringeri Saradha

ஸ்ரீ அபிநவ வித்யாதீர்த்த மஹாஸ்வாமிகளின் அருள்மொழிகள்

யா சாரதாம்பேத்யபிதாம் வஹந்தீ
க்ருதாம் ப்ரதிக்ஞாம் பரிபாலயந்தி |
அத்யாபி ச்ருங்கேரிபுரே வஸந்தி
வித்யோததேsபீஷ்டவரான் திசந்தி ||
தாம் சாரதாம் நமாமி

(எவள் ‘சாரதாம்பாள்’ என்ற பெயரைப் பெற்றுள்ளாளோ, தான் செய்த பிரதிக்ஞையை (உறுதிமொழியை) காத்து வருகின்றாளோ, இன்றும் சிருங்கேரியில் வாழ்ந்து வருகிறாளோ அவள், (அனைவரும்) விரும்புவனவற்றையெல்லாம் அளித்துக்கொண்டு ஒளியுடன் திகழ்கிறாள். இத்தகைய அம்பாளைப் போற்றுகின்றேன்.)

ஒரு சமயம் மண்டனமிச்ரர் என்பவர் சங்கரரிடம் வாதத்தில் தோல்வியுற்றார். சாரதாம்பாளும் தோற்றுப் போக நேரிட்டது. பிறகு சாரதாம்பாள் பிரஹ்மலோகம் செல்வதற்குச் சித்தமாயிருந்தாள்.

adhi sankarar
adhi sankarar

ஆனால் அப்பொழுது பகவத்பாதாள் தன்னுடைய மந்திர சக்தியினால் அம்பாளைத் தடுத்துவிட்டார். பிற்கு அவர் அம்பாளிடம், “நான் எங்கு ஆசிரமத்தை ஏற்படுத்துகின்றேனோ அங்கு நீ சாந்நித்யம் கொடுக்க (தங்கி இருந்து அருள்புரிய) வேண்டும்” என்று பிரார்த்தனை செய்தார்.

அம்பாளின் பெயர் சாரதா. ஆதலால்தான் அவளைப் பற்றிச் சுலோகத்தில், “யா சாரதாம்பேத்யபிதாம் வஹந்தீ “ என்று சொல்லப்பட்டுள்ளது.

அடுத்து, “க்ருதாம் ப்ரதிக்ஞாம் பரிபாலயந்தி” என்று ஓர் அடி வருகிறது. பகவத்பாதாள் செய்த பிரார்த்தனையில் அம்பாள் திருப்தியடைந்து, “உமது பிரார்த்தனையை நான் ஏற்றுக்கொள்கிறேன். நீர் எங்கு ஆசிரமத்தை ஏற்படுத்துகின்றீரோ, அங்கு நான் சாந்நித்யம் தருகின்றேன்” என்கிற பிரதிக்ஞையைச் செய்திருந்தாள்.

அந்தப் பிரதிக்ஞையை அவள் (இன்றும் இன்றும் சிருங்கேரியில் வாழ்ந்து) காப்பாற்றிக்கொண்டு வருகிறாள். அதனால்தான் அவளைப்பற்றி, “க்ருதாம் ப்ரதிக்ஞாம் பரிபாலயந்தி| அத்யாபி ச்ருங்கேரிபுரே வஸந்தி” என்று சொல்லப்பட்டுள்ளது.

abinavavidhyadhirthar-3
abinavavidhyadhirthar-3

அடுத்த வரியில், “வித்யோததேsபீஷ்டவரான் திசந்தி” என்று வருகிறது. அம்பாள் பக்தர்களுக்கு எந்த வரம் வேண்டியிருக்கின்றதோ அதைத் தருகின்றாள்.

எங்கெல்லாம் பகவத்பாதாள் பீடத்தை ஏற்படுத்தினாரோ அங்கெல்லாம் அம்பாள் தன் சாந்நித்யத்தை அளித்துக் கொண்டிருக்கிறாள் என்பது இந்த சுலோகத்திலிருந்து விளங்குகின்றது.

Leave a Reply