வேண்டிய நன்மை பெற.. ஆச்சார்யாள் அருளுரை!

செய்திகள்
bharathi theerthar
bharathi theerthar

பரமாத்மாவாகிய பகவானுடைய மஹிமை அஸாதாரணமானது. அவரை நாம் எவ்வளவு புகழ்ந்தாலும் போதாது. ஆனால் நம் சக்திக்கேற்ப அந்த பரமாத்மாவை பூஜித்து நமது வாழ்க்கையை மேன்மையாக்க வேண்டும்.

நம் முன்னோர்கள் பரமாத்மாவை அனேக நாமங்களால் துதித்து நற்பயன் அடைந்தார்கள்.

இவைகளில் ஸஹஸ்ரநாமங்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை. ஸஹஸ்ரநாமங்களுக்ள் லலிதா ஸஹஸ்ரநாமம் விசேஷமானது.

லலிதா ஸஹஸ்ரநாமம் வேதாந்த தத்வங்களை மொழிந்து பரமாத்மாவின் நற்குணங்களுடன் கூடிய உருவத்தை (ஸகுண ரூபத்தை)யும் துதிக்கும் முறைகளையும் மற்றும் பரதேவதை எவ்வாறு ஜனங்களுக்கு அனுக்கிரஹம் புரிகிறாள் என்பதையும் வர்ணிக்கிறது.

குறிப்பாக ஸ்ரீ சங்கரர் உபதேசம் செய்த அத்வைத சித்தாந்தம் லலிதா ஸஹஸ்ரநாமத்தில் அனேக இடங்களில் கூறப்பட்டிருக்கிறது.

மித்யாஜகத் அதிஷ்டானா த்வைதவர்ஜிதா, தத்வ மர்த்தஸ்வரூபிணி என்ற நாமாக்கள் அத்வைத ஸித்தாந்தங்களை வெளிப்படுத்துகின்றன.

நாமபாராயணப்ரீதா என்ற நாமா நாம் அவளுடைய அனுக்ரஹத்தை பெறுவதற்கு அவளுடைய நாமாக்களை பாடவேண்டும், என்று காண்பிக்கிறது.

ஸத்யப்ரஸாதினி என்ற நாமா நிஷ்டையுடன் அவளைப் பூஜித்தால் நாம் வேண்டுவதை வேகமாக பெறமுடியும் என்று சொல்கிறது.

அதே மாதிரி நிர்வாண ஸுகதாயினி என்ற நாமாவுக்கு மோக்ஷம் அடைவதற்காக அவளுடைய நாமாக்களை ஜபிக்கிறவர்களின் விருப்பமும் நிறைவேறக்கூடியது என்பது பொருள்.

கல்பவிருக்ஷம் போன்று அவர்களுடைய ஆசைகளை பூர்த்தி செய்யும் லலிதா ஸஹஸ்ரநாமத்தை பாராயணம் செய்து எல்லா பக்தர்களும் தங்களுக்கு வேண்டிய நன்மை அடைந்து கொள்வார்களாக

ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகளின் அருளுரைகள்

Leave a Reply