மனிதன் தன்னுடைய வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடத்தையும் நொடியையும் மிகவும் மதிப்புள்ளதாக நினைக்க வேண்டும் அப்படிப்பட்ட நினைவு இருந்தால் நேரத்தை சரியாக பயன்படுத்திக்கொள்ள முடியும்.
நம்முடைய ஜீவனத்தில் ஒவ்வொரு ஷணமும் நல்ல காரியத்தில் தான் கழிய வேண்டுமே தவிர அதை வீணாக்க கூடாது. முன்னோர்கள் இதையேக் கருத்தில் கொண்டு ஒவ்வொரு நொடியையும் வீணாக்காமல் சத் காரியங்களில் விநியோகம் செய்து கொண்டிருந்தார்கள்.
மனசில் கெட்ட எண்ணத்துக்கு இடம் கொடுக்காமல் நல்ல எண்ணங்களை வைத்துக் கொண்டிருந்தால் அப்பொழுது நல்ல காரியங்கள் நடக்கும். தப்பான காரியத்தை செய்தால் அதனுடைய பலனை செய்தவன் தான் அனுபவிக்க வேண்டும்.
அந்த அனுபவத்தின் போது மிகவும் தாபம் உண்டாகும் முன்னாடியே அதை யோசனை செய்து இப்படி செய்யக்கூடாது என்கிற பாவனை உண்டானால் அப்பொழுது தவறான காரியம் நடக்காது போன சமயம் திரும்பி வராது அதைத்தான் ஸ்ரீ பகவத் பாதர்
ப்ரத்யாயாந்தி கதா: புனர்ன திவஸா:
என்று சொன்னார்.
அந்த விலை மதிக்க முடியாத சமயத்தில் சத்காரியங்களை செய்வதற்கு முயவவேண்டும் சத்காரியமென்றால் தனக்கும் பிறருக்கும் நல்லது உண்டாகும் காரியம்.
இந்த பாவனை எல்லோருக்கும் எப்போதும் இருந்து எல்லா ஜனங்களும் நல்ல காரியங்களில் தன்னுடைய நேரத்தை செலவு செய்யட்டும் என ஆசீர்வதிக்கிறேன்.
ஆயுர்ன உயதி பச்யதாம் ப்ரதிதினம்
யாதி க்ஷயம் யௌவனம்
ப்ரத்யாயாந்தி கதா: புனர்ன திவஸா:!
லக்ஷ்மீஸ்தோய தரங்க தங்கக்ஷபலா
வித்யச்சலம் ஜிவிதம்
தஸ்மானமாம் சரணாகதம்
கருணயா த்வம் ரக்ஷா ரக்ஷா துநா !
செலவழிக்கும் நேரம்: ஆச்சார்யாள் அருளுரை! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.