ஸ்ரீசுப்ரமணிய புஜங்கம்: ஆச்சார்யாள் அருளுரை!

செய்திகள்
Bharathi theerthar - 1

அரக்கர்களை அழிக்க பகவான் அனேக ரூபங்களில் தோன்றினார். அவைகளில் ஸ்ரீ ஸுப்பரஹ்மண்யருடைய ரூபமும் ஒன்று. ஸ்ரீ பரமேஸ்வரரின் புதல்வரான இவர் தாரகாஸீரன் மற்றும் வேறு அஸீரர்களைக் கொன்று அதன் மூலம் உலகத்தை காப்பாற்றினார்.

அவருடைய அவதாரம் ஸ்ரீமத்ராமாயணம் ஸ்கந்தபுராணம் மற்றும் வேறு புராணங்களில் தத்ரூபமாக வர்ணிக்கப்பட்டிருக்கிது.

ஸுப்ரஹ்மண்ய பகவானுக்கு ஸ்கந்தர், முருகன், கார்த்திகேயன் என்று வெவ்வேறு பெயர்களும் உண்டு. அவர் ஸனத்குமாரர் என்ற உருவத்தில் நாரதருக்கு பிரஹ்ம வித்யையை உபதேசம் பண்ணினார்.

நம் நாட்டில் ஸ்ரீ ஸுப்ரஹ்மண்யர் அனேக இடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டு, அதனால் ஜனங்கள் அனுகிரகம் பெருகிறார்கள்.

அந்த இடங்களுக்குள் ஆறு படை வீடு என்று அழைக்கப்படும் ஆறு க்ஷேத்ரங்கள் அவருடைய விசேஷ மகிமையுடன் ஜ்வலிக்கின்றன. ஸ்ரீ ஸுப்ரஹ்மண்யரை இந்த இடங்களில் வழிபடுவது நம் நலனுக்கு வழிவகுக்கும்.

ஸுப்ரமண்ய புஜங்கம் என்ற அழகான ஸ்தோத்ரமாலையை ஸ்ரீ ஆதிசங்கரர் இயற்றியிருக்கிறார். பகவத் பக்தியுள்ள ஜனங்கள் இந்த ஸ்லோகங்களை தினமும் படித்து நன்மை அடைவார்களாக. உடல் மற்றும் மனநோய்களுக்கு சிறந்த மருந்து

ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகளின் அருளுரைகள்

Leave a Reply