காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில், ஏகாம்பரநாதர் கோயிலுக்கு தலா 2 கோடி நிதி

செய்திகள்

வரதராஜ பெருமாள் கோயிலில் பெருந்தேவி தாயார் சன்னதி விமானத்துக்கு தங்கம் போர்த்தும் பணி தொடக்க விழாவுக்கு வந்த அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

மத்திய அரசு தமிழகத்தில் கோயில் புனரமைப்பு பணிகளுக்காக  100 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இந் நிதியில் வேலூரில் உள்ள 26 கோயில்கள் புனரமைக்கப்பட உள்ளன. காஞ்சிபுரத்தில் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு  2 கோடியும், வரதராஜ பெருமாள் கோயிலுக்கு  2 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வரதராஜ பெருமாள் கோயிலில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தை புதுப்பிக்க  3 கோடி நிதி கேட்கப்பட்டுள்ளது என்றார்.

அரசு அருங்காட்சியகம் ஆயிரங்கால் மண்டபத்தில் அமைக்கப்படுமா என்று நிருபர்கள் கேட்டதற்கு இது குறித்து இந்து சமய அறநிலையத் துறைஆணையர்தான் பதில் அளிக்க முடியும் என்றார்.

https://www.dinamani.com/edition/Story.aspx?artid=333921

Leave a Reply