தீபாவளி, கேதார கௌரி விரதம் நல்ல நேரம்

செய்திகள்

நரக சதுர்தசி: ஆஸ்வீஜ பகுள சதுர்தசி : 4வது ஜாமத்தில்
(அதிகாலை 1:13 மணி முதல் அதிகாலை 3:36 மணி வரை)
சதுர்தசி உள்ளது. அன்றே நரக சதுர்தசி.

வியாழன் நள்ளிரவு பின்னர் (விடிந்தால் வெள்ளி- அதிகாலை) நரக சதுர்தசி,
வெள்ளி (19 ஐப்பசி விக்ருதி – 5.11.2010) அன்று அதிகாலையில் சதுர்தசி இருக்கும் காலத்தில் தைலக்குளியல் சிறந்தது.

தீபாவளி: (19 ஐப்பசி விக்ருதி – 5.11.2010)
நரக சதுர்தசி அடுத்த நாள் தீபாவளி என்கிற விதிப்படி வெள்ளி சூரிய உதயத்துக்குப் பின்னர் வியாழக்கிழமை நரக சதுர்தசி என்பதால் மறுநாள் சூரிய உதயதுக்குப் பின்னர் வெள்ளி 5.11.2010 அன்று தீபாவளி.

மாலையில் பிரேதாஷ காலத்தில் அமாவாசை இருக்கும் காலத்தில் தீபம் ஏற்றி வழிபடுவது மிகவும் சிறப்பானது.

தீபம் ஏற்ற நல்ல நேரம்:

தீபாவளி அன்று மாலை 5:41(சூரிய அஸ்தமனம்) பின்னர் தீபம் ஏற்றி வழிபடுதல் நன்று.

தீபாவளி தைலக் குளியல், புத்தாடை உடுத்துதல் (19 ஐப்பசி விக்ருதி – 5.11.2010)

தீபாவளி அன்று அஷ்டம சுத்தியும் குரு பார்வையும் உடைய கன்னியா லக்னத்தில் அதிகாலை 2:45

மணிக்கு மேல் அதிகாலை காலை 4:45 மணிக்கு பின்னர் தைல குளியல், புத்தாடை உடுத்துதல் நன்று.

கேதார கௌரி விரதம் – நோன்பு – பூஜை செய்ய நல்ல நேரம் (19 ஐப்பசி விக்ருதி – 5.11.2010)

தீபாவளி (அமாவாசை) அன்றுதான் லட்சுமி பூஜை, கேதார கௌரி விரதம் வழிபட வேண்டும்.

தீபாவளி (5.11.2010) அன்று 5.11.2010 வெள்ளி மதியம் கீழ்க்காணும் நல்ல நேரங்களில் கேதார கௌரி விரதம் செய்யலாம்…

மதியம் 1:10 மணி முதல் மதியம் 2:45 மணி வரை
மாலை 4:13 மணி முதல் மாலை 6:18 மணி வரை

தகவல்: பாலு. சரவண சர்மா
www.prohithar.com

Leave a Reply