நாமக்கல்லில் பிரசித்தி பெற்று விளங்குவதும், வரலாற்றுச் சிறப்பு மிக்கதுமான குடவரைக் கோயிலான அருள்மிகு நரசிம்மசுவாமி திருக்கோயில் நிர்வாகத்தின் சார்பில் நவராத்தி விழா கொண்டாடப்படுகிறது.
வரும் 8-ம் தேதி விழா துவங்குகிறது. வரும் 17-ம் தேதி வரை விழா நடைபெறும் நாட்களில் நாமகிரித் தாயார், நரசிம்ம சுவாமி, அரங்கநாயகி தாயார், அரங்கநாதர் உற்சவ மூர்த்திகளாக ஊஞ்சலில் கொலுவீற்றிருப்பர்.
விழாவின் முடிவு நாளன்று நரசிம்மர், அரங்கநாதர் சுவாமிகள் குதிரை வாகனத்தில் விஜயதசமி அம்புபோடுதலும்,திருவீதி உலாவும் நடைபெறும்