திருப்பதியில் நவராத்திரி பிரம்மோற்சவம்: கோலாகல தொடக்கம்

செய்திகள்

ஆண்டுதோறும் திருப்பதியில் பிரம்மோற்சவ விழா நடக்கிறது, மூன்று வருடங்களுக்கு ஒரு முறை வருடாந்திர மற்றும் நவராத்திரி பிரம்மோற்சவவிழா நடக்கிறது. இந்த ஆண்டு கடந்த மாதம் 9 நாட்கள் இவ்விழா நடைபெற்றது. இப்போது நவராத்திரியை முன்னிட்டு இரண்டாவது பிரம்மோற்சவ விழா நடப்பது சிறப்புக்குரியது.

இதில் மலையப்ப சுவாமிகள், பெத்த சேஷ வாகனம், அம்சவாகனம், மோகினி அவதாரம், கஜவாகனம், சிம்மவாகனம், கல்பவிருக்ஷ வாகனம், சூர்யபிரயை வாகனம், அஷ்வ வாகனம் ஆகிய வாகனங்களில் மாட வீதி உலா வந்து நாள்தோறும் பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.

இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்ள இருப்பதால் கோயில் நிர்வாகத்தின் சார்பில் பக்தர்களுக்கு அடிப்படை மற்றும் பாதுகாப்பு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து கழகத்தின் சார்பில் நிமிடத்திற்கு மூன்று பேருந்துகள் வீதம் தேவையான பேருந்து வசதிகள்செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply