ஆதீனங்கள், மடாதிபதிகள் அரசியலில் தலையிடக்கூடாது- கர்நாடக ஜீயர் சுவாமிகள்..

செய்திகள்
50" src="https://www.deivatamil.com/wp-content/uploads/2022/12/e0ae86e0aea4e0af80e0aea9e0ae99e0af8de0ae95e0aeb3e0af8d-e0aeaee0ae9fe0aebee0aea4e0aebfe0aeaae0aea4e0aebfe0ae95e0aeb3e0af8d-e0ae85.jpg" alt="1798669 kanyakumari - Dhinasari Tamil" class="wp-image-271368" srcset="https://www.deivatamil.com/wp-content/uploads/2022/12/e0ae86e0aea4e0af80e0aea9e0ae99e0af8de0ae95e0aeb3e0af8d-e0aeaee0ae9fe0aebee0aea4e0aebfe0aeaae0aea4e0aebfe0ae95e0aeb3e0af8d-e0ae85.jpg 615w, https://www.deivatamil.com/wp-content/uploads/2022/12/e0ae86e0aea4e0af80e0aea9e0ae99e0af8de0ae95e0aeb3e0af8d-e0aeaee0ae9fe0aebee0aea4e0aebfe0aeaae0aea4e0aebfe0ae95e0aeb3e0af8d-e0ae85-1.jpg 300w" sizes="(max-width: 615px) 100vw, 615px" title="ஆதீனங்கள், மடாதிபதிகள் அரசியலில் தலையிடக்கூடாது- கர்நாடக ஜீயர் சுவாமிகள்.. 1 - Dhinasari Tamil" data-recalc-dims="1">

ஆதீனங்களும், மடாதிபதிகளும் அரசியலில் தலையிடக்கூடாது.ராமானுஜரின் போதனைகள் நாடு முழுவதும் சிறந்து வளர்ந்து ஓங்கி வருகிறது. ஆன்மீகவாதிகளும் மடாதிபதிகளும் சுதந்திரமாக கர்நாடகத்தில் செயல்படுகின்றனர் என்று கர்நாடக ஜீயர் சுவாமிகள் கன்னியாகுமரியில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார்

கர்நாடக மாநிலம் மேல்கோட்டை ஸ்ரீ யதுகிரி யதிராஜமடம் 41-வது பட்டம் பீடாதிபதி ஸ்ரீ ஸ்ரீ யது கிரி யதிராஜ நாராயண ராமானுஜ ஜீயர்சுவாமிகள் கன்னியாகுமரியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ராமானுஜரின் போதனைகள் நாடு முழுவதும் சிறந்து வளர்ந்து ஓங்கி வருகிறது. அவர் சமூகங்களுக்கு இடையே எந்த விதமான ஏற்றத்தாழ்வுகளும் இருக்கக் கூடாது என்று விரும்பினார். ராமானுஜர் காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை 3 முறை பாதயாத்திரை மேற்கொண்டார். காஷ்மீரில் அழிக்கப்பட்ட பண்டிட்டுகளுடைய நூல்களை மீட்டெடுத்து அவைகளை டிஜிட்டல் முறையில் கணினி மயமாக்கும் முயற்சி நடை பெற்று வருகிறது.

ராமானுஜருக்கு காஷ்மீரில் சிலை நிறுவப்பட்டுஉள்ளது. அதனை தொடர்ந்து குஜராத்திலும் தற்போது கன்னியாகுமரியிலும் சிலை அமைக்கப்பட்டு உள்ளது. அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் பூரி ஜெகநாத்தில் ராமானுஜரின் சிலை அமைக்கப்படும். ஆன்மீகவாதிகளும் மடாதிபதிகளும் சுதந்திரமாக கர்நாடகத்தில் செயல்படுகின்றனர். தமிழ்நாடு பற்றி எனக்கு அதிகமாக தெரியவில்லை. காசியில் நடைபெறும் தமிழ் சங்கம விழாவிற்கு கலந்து கொள்ள எனக்கு அழைப்பு விடுத்தால் கண்டிப்பாக கலந்து கொள்வேன். தற்போது இந்தியா முழுவதும் ஆன்மீகம் தலை தூக்கி வளர்ந்து வருகிறது. நான் அரசியல் பேச விரும்பவில்லை. ஆதீனங்களும், மடாதிபதிகளும் அரசியலில் தலையிடக் கூடாது. ஆன்மீகத்துடன் அரசியலை இணைக்க கூடாது. நாங்கள் சன்னியாசிகள் இறைவனிடம் பிரார்த்தனை செய்பவர்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply