மரணத்தை வென்றவர்கள்.
வேத புராணங்களில் மரணத்தை வென்றவர்கள் பற்றி நான்கு கதைகள் உள்ளன.
எல்லைக்குட்பட்ட ஆயுள் கொண்ட மார்க்கண்டேயன் தவத்தால் ஈஸ்வர அருளைப் பெற்று சிரஞ்சீவி ஆனார். தன் இறப்பைத்தானே வென்றார்.
சாவித்திரி கணவரின் மிருத்யுவை வென்றாள். இதில் ஈஸ்வர அருள் பற்றி கூறப்படவில்லை. எமனோடு போராடினாள். மூர்ச்சையடைந்த கணவனின் உயிரை அபகரிப்பதற்கு வந்த எமனை நேராகப் பார்த்தாள். வாதிட்டாள். வென்றாள்.
இதுவும் மார்க்கண்டேயர், நசிகேதன̷் 0; இவர்கள் இருவரை போலவே யம தரிசனம், வாக்குவாதம், வெற்றி இவற்றோடு கூடிய கதையே.
இத்தகைய யம தரிசனமும் சம்பாஷ ணையும் யோகம், அந்தரங்கம் இவற்றால் ஆன செயல்பாட்டின் ஒரு பாகமாகவே எடுத்துக்கொள்ள வேண்டும்.
மரண வாயிலில் இருந்த கணவனின் சூட்சும சரீரத்தைத் தொடர்ந்து சென்று கணவனின் மிருத்யுவை வென்று ஜீவனின் உயிரைத் திரும்ப உடலில் சேர்த்து, திரும்பி வந்த யோகினியாக சாவித்திரியைப் பார்க்க வேண்டும்.
ஸ்ரீகிருஷ்ணர் குரு புதல்வனை பரலோகத்திலிருந்து வரவழைத்து அளித்தார். இங்கு யோக சாதனை விசேஷங்கள் கூறப்படவில்லை.
இறப்பு என்பது உலக இயல்பே ஆனாலும் அதனை வெல்வது சாத்தியம்தான் என்பது இதன் கருத்து.
நசிகேதன் தன் மரணத்தை எதிர்க்கவில்லை. ஸ்ரீராமனின் வனவாசம் போலவே, தந்தையின் ஆணையை ஏற்று நடந்தான். நசிகேதன் மூலம் மயணத்தை வெல்லும் மார்க்கத்தை உலகிற்கு உபதேசித்தார் எமதர்மராஜா. மிருத்யு தேவதையான யமனே மரண ரகசியத்தை நசிகேதனுக்கு போதித்ததால், மிருத்யுஞ்ஜய இயல்பு நசிகேதனுக்கு அனுபவம் ஆயிற்று.
மானுட உலகின் மீது அபாரமான கருணையோடு எமதர்மராஜன் இந்த போதனையை கேட்பவருக்கும், கூறுபவர்களுக்கும் கூட மிருத்யுஞ்ஜயத்துவம் சித்தியாகும் என்று வாக்குறுதி அளித்தது கடோபநிஷத் த்ருதீயவல்லியில் இறுதி இரண்டு மந்திரங்கள் மூலம் அறியமுடிகிறது.
விவேகமுள்ளவர்கள் விரும்பிப் பெறவேண்டியது மிருத்யுஞ்ஜய இயல்பையே!
– சத்குரு ஶ்ரீசிவானந்தமூர்த்தி அவர்கள் எழுதிய ‘கட யோகம்’ நூலிலிருந்து
தமிழாக்கம்: ராஜி ரகுநாதன்.