e0af80e0aeb8e0af8de0aeb5e0aeb0-e0ae9ae0aea4e0ae95e0aeaee0af8d-e0aeaae0ae95e0af88-e0ae95e0af8a.jpg" alt="arapaliswarar - Dhinasari Tamil" class="wp-image-239389 lazyload ewww_webp_lazy_load" title="அறப்பளீஸ்வர சதகம்: பகை கொள்ளக்கூடாதவர்கள்..! 1 - Dhinasari Tamil" decoding="async" data-sizes="auto" data-src-webp="https://www.deivatamil.com/wp-content/uploads/2022/05/e0ae85e0aeb1e0aeaae0af8de0aeaae0aeb3e0af80e0aeb8e0af8de0aeb5e0aeb0-e0ae9ae0aea4e0ae95e0aeaee0af8d-e0aeaae0ae95e0af88-e0ae95e0af8a.jpg.webp" data-srcset-webp="https://www.deivatamil.com/wp-content/uploads/2022/05/e0ae85e0aeb1e0aeaae0af8de0aeaae0aeb3e0af80e0aeb8e0af8de0aeb5e0aeb0-e0ae9ae0aea4e0ae95e0aeaee0af8d-e0aeaae0ae95e0af88-e0ae95e0af8a.jpg.webp 1024w, https://www.deivatamil.com/wp-content/uploads/2022/05/e0ae85e0aeb1e0aeaae0af8de0aeaae0aeb3e0af80e0aeb8e0af8de0aeb5e0aeb0-e0ae9ae0aea4e0ae95e0aeaee0af8d-e0aeaae0ae95e0af88-e0ae95e0af8a-2.jpg.webp 300w, https://www.deivatamil.com/wp-content/uploads/2022/05/e0ae85e0aeb1e0aeaae0af8de0aeaae0aeb3e0af80e0aeb8e0af8de0aeb5e0aeb0-e0ae9ae0aea4e0ae95e0aeaee0af8d-e0aeaae0ae95e0af88-e0ae95e0af8a-3.jpg.webp 768w, https://www.deivatamil.com/wp-content/uploads/2022/05/e0ae85e0aeb1e0aeaae0af8de0aeaae0aeb3e0af80e0aeb8e0af8de0aeb5e0aeb0-e0ae9ae0aea4e0ae95e0aeaee0af8d-e0aeaae0ae95e0af88-e0ae95e0af8a-1.jpg.webp 1200w" srcset="https://www.deivatamil.com/wp-content/uploads/2022/05/e0ae85e0aeb1e0aeaae0af8de0aeaae0aeb3e0af80e0aeb8e0af8de0aeb5e0aeb0-e0ae9ae0aea4e0ae95e0aeaee0af8d-e0aeaae0ae95e0af88-e0ae95e0af8a.jpg 1024w, https://www.deivatamil.com/wp-content/uploads/2022/05/e0ae85e0aeb1e0aeaae0af8de0aeaae0aeb3e0af80e0aeb8e0af8de0aeb5e0aeb0-e0ae9ae0aea4e0ae95e0aeaee0af8d-e0aeaae0ae95e0af88-e0ae95e0af8a-2.jpg 300w, https://www.deivatamil.com/wp-content/uploads/2022/05/e0ae85e0aeb1e0aeaae0af8de0aeaae0aeb3e0af80e0aeb8e0af8de0aeb5e0aeb0-e0ae9ae0aea4e0ae95e0aeaee0af8d-e0aeaae0ae95e0af88-e0ae95e0af8a-3.jpg 768w, https://www.deivatamil.com/wp-content/uploads/2022/05/e0ae85e0aeb1e0aeaae0af8de0aeaae0aeb3e0af80e0aeb8e0af8de0aeb5e0aeb0-e0ae9ae0aea4e0ae95e0aeaee0af8d-e0aeaae0ae95e0af88-e0ae95e0af8a-1.jpg 1200w">பகை கொள்ளத் தகாதவர்
மன்னவர், அமைச்சர், துர்ச்சனர், கோளர், தூதரொடு மாறாத மர்மம் உடையோர், வலுவர், கரு ணீகர், மிகு பாகம்செய் தன்னம் இடும் மடையர்,மந் திரவா தியர், சொன்னம் உடையோர் புலையர், உபதேச மதுசெய்வோர் சூழ்வயித் தியர்,க விதைகள் சொற்றிடும் புலவர் இவர் பதினைந்து பேரொடும் சொப்பனந் தனில் ஆகிலும் நன்னெறி அறிந்தபேர் பகைசெய்தி டார்கள் இந் நானிலத் தென்பர் கண்டாய்! நாரியோர் பாகனே! வேதாக மம்பரவும் நம்பனே! அன்பர் நிதி யே! அன்னம்ஊர் பிரமனும் கண்ணனும் காணாத அண்ணலே! அருமை மதவேள் அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர் அறப்பளீ சுரதே வனே!
உமையொரு பங்கனே!, மறையும் ஆகமமும் போற்றும் சிறப்புடையவனே!, அன்பரின் சேமப்பொருளே!, அன்னத்தில் ஊர்ந்து வரும் நான்முகனும் திருமாலும் கண்டுபிடிக்க இயலாத பெரியோனே!, அருமை தேவனே!, அரசர், மந்திரிகள், தீயோர், கோள் சொல்லுவோர், தூதர்களுடன், நீங்காத செற்றம் கொண்டவர்கள், வலிமையுடையோர், கணக்கர், சிறந்த சமையல் செய்து உணவிடும் சமையற்காரர், மந்திரஞ் செய்வோர் செல்வமிக்கவர்கள், இழிந்தோர், உபதேசியர், ஆராய்ச்சியுடைய மருத்துவர், செய்யுள் இயற்றும் புலவர்கள், இவர்கள் பதினைவருடனும் கனவிலும் நல்ல நெறி அறிந்தவர்கள் இவ்வுலகிற் பகை கொள்ளார், என்று கூறுவர்.
Source: தமிழ் தினசரி | dhinasari.com
Related